பக்கம்:செவ்வானம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வானம் 5 2 10 தாமோதரனுக்கு என்றுமே ஒரு வருத்தம் உண்டு. இந்த வாழ்க்கை சாரமற்றது. அதில் விசேஷங்கள் நிகழ்வதில்லை. தொலையட்டும். விபத்துக்கள் கூட அல்லவா எதிர்ப்பட மாட்டேன் என்கிறது' என்று அவன் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். ஒரே இரவில் விசேஷங்களும் விபரீதங்களும் வந்து சேர்ந்தபோது அவன் மகிழ்ந்தானா? அதை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. குழப்பம்தான் மூடுபனிபோல் கவிந்து கிடந்து அவன் உள்ளத்தில், இரவில் வெகுநேரம் தூங்காமலிருந்து, குறிப்புப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்து விட்டு, ஆவலுடன் ஆவிச் சேர்த்துக் கட்டிக் கொண்ட அருமைத் துயிலில் தன்னை மறந்து கலந்துவிட்ட தாமோதரன் காலையில் எழுந்தபோது மணி ஏழரையாகியிருந்தது. சே. ரொம்பநேரம் துங்கிவிட்டோம். இன்று செய்து முடிக்க வேண்டிய அவசியத் திருப்பணி எதுவுமில்லை. ஆகையினாலே...' என்று எண்ணத்தை ஏலத்தில் விட்டுவிட்டது மனம், - எழுந்து சோம்பல் முறித்து நின்ற அவன் பார்வையில் எதிரே பரப்பிக்கிடந்த குறிப்புப் புத்தகம் பட்டது. இன்றைக்காவது, குறிப்புகளை எழுதிவிடவேண்டும். எத்தனையோ நாட்களாக எழுதவில்லை வரவர நான் ஒரு பெரிய சோம்பேறியாகி வருகிறேன்! என்று தனக்குத் தானே போதனை புரிந்தான் தாமோதரன். அதன் பயனாக அன்று பகலில் அவனது குறிப்புப் புத்தகத்திலே பல பக்கங்கள் கரியாயின. தனது சிருஷ்டியைத் தானே ரசித்து மகிழும்போது எழுதிய பரிபூரண திருப்தியுடன் அவன் படித்துக் கொண்டிருந்தான். கலை, கலாசேவை, கலை உயர்வுக்காகப் பாடுபடுதல் என்று ஒரு சிலர் கூச்சலிடுவது உண்மையில் சுயவிளம்பர மோகத்தினால் தான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/54&oldid=841419" இலிருந்து மீள்விக்கப்பட்டது