பக்கம்:செவ்வானம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வானம் 8, 4 மனிதன் விசித்திரமான பிராணி ஒன்றில் மட்டுமே திருபதியடைந்துவிடுவதில்லை. விதவித உணர்ச்சிகளின் நிறைவாக இருப்பதனால் பலவிதமான பசிகளும் எழ இடமிருக்கிறது. ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் தனித்தனிரகம், அதனால் உலக அரங்கிலே வெவ்வேறு விதமான பண்பாடுகளை ஆசைகளை, குழப்பங்களை வெறித்தனங்களை, இவற்றின் விபரீத விளைவு களைக் காண முடிகிறது. பசிகள் பலவிதம். வயிற்றுப்பசி. எல்லோருக்கும் பொது. அதற்கடுத்தது ஆண், பெண் உறவுப் பசி, குழந்தை வேண்டும். குழந்தையோடு கொஞ்சவேண்டும் என்பது கூட ஒரு பசிதான், பணப் பசி. புகழ்ப் பசி, அறிவுப்பசி, கலைப் பசி கணக்கிட்டுச் சொல்ல முடியாது போ! பெரிய மனுஷத்தனத்தின், வெளிச்சம் போடுதலின், வீணத் தனங்கள் புரிவதின், சேவை, கட்சி, கழகம், பொதுத்தொண்டு. தலைமை தாங்குதல் என்றெல்லாம் தலைதுாக்குதலின் அடிப் படைக்காரணம் ஒன்றே ஒன்றுதான். தன்னை உலகுக்கு உணர்த்த வேண்டும் தான் இருப்பதை எவ்வளவு பேர் உணரமுடியுமோ, அத்தனை பேரும் உணரும்படிச் செய்யவேண்டும் என்ற ஆசை தான் பசி என்று சொல்கிறாயா? சொல்லிவிட்டுப் போ! இந்த ஆசை ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்த பண்பு. குழந்தையோடு கூடப் பிறந்த குணம். அது தினந்தோறும் வளர்ந்து வரும் சக்தி குழந்தையைக் கவனித்துப்பார். உன் மனைவியை, உன் சகோதரியை, சகோதரனை - உனக்குத் தெரிந்த எவரையும் - நோக்கு. அவர்களது சொல்லிலும் செயலிலும், அவர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தான் என்கிற சிறப்பை தன்னை- பிறருக்கு உணர்த்த வேண்டும் என்ற ஆசை துடிப்பதைக் காண்பாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/56&oldid=841421" இலிருந்து மீள்விக்கப்பட்டது