பக்கம்:செவ்வானம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வானம் 5. 6 பார்த்தீரா, இது கூடத் தன்னைச் சிறப்பாக எடுத்துக்காட்ட முயலும் வீனத்தனத்தின் விளைவுதான்' எழுதியிருப்பதைப் படித்த தாமோதரன் சிரித்தான். அவனது நண்பன் ஒருவன் சொன்னவார்த்தைகள் அவன் நினைவில் மிதந்தன. தாமோதரா, நீ ஒரு புதிரோ இல்லையோ, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் புதிராக வாழ ஆசைப்படும் நீ மற்றவர்களை உன்னைப் புதிர் என்று மதிக்கவேண்டும் என்பதற்காகவே பிறருக்குப் புரியாதகாரியங்களைச் செய்து வருகிறாய் என்பது நன்கு தெரிகிறது. அதனாலேயே மற்றவர்களால் உன் அந்தரங்க நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாதபடி விசித்திர வார்த்தைகளைச் சிதறுகிறாய் என்று நினைக்கிறேன். சில சமயம் உன்னை நீயே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை - உணர முடிவதில்லை - என்று எனக்குத் தோன்றுகிறது: நண்பனின் விமர்சனம் நினைவுக்கு வரவும், அவன் உள்ளம் சிரித்தது. அதன் மலர்ச்சி அவனது உதடுகளிலும் நெளிந்தது. “என்ன தோழரே, தனியாக உட்கார்ந்து கொண்டு நீராகவே மகிழ்கிறீரே. இந்த மேதாவிக்குணம் இந்நேரத்தில் உம்மிடம் பிரதிபலிக்கக் காரணம் என்ன? என்ற பேச்சு அவனைத் திடுக்கிட வைத்தது. திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் நாற்காலியருகிலேயே அவனது நண்பன் ரகுராமன் நிற்பதைக் கண்டு வியப்புற்று நீ எப்ப வந்தாய்? நீ வந்ததே தெரியாதே' என்றான். எப்படித் தெரியும் நீ தான்.உலகத்தையே மறந்து உனது யோசனையில் ஆழ்ந்து விட்டாயே. சுற்றிலும் நடக்கிறது உனக்கு எங்கே தெரியப்போகிறது என்று சிரித்தான் நண்பன். நான் உலகத்தை மறந்துவிடவில்லை. அதைப்பற்றிஞாபகம் என்றுமிருப்பதானால்தான், உலகம் உருப்படவேண்டுமே என்பதற்காக..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/58&oldid=841423" இலிருந்து மீள்விக்கப்பட்டது