பக்கம்:செவ்வானம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ཨམ༽ ༼་་} செவ்வானம் மனதுக்குச் சமாதானம் கூறிக்கொண்டான். நானென்ன டயரியா எழுதுகிறேன். எனது எண்ணங்களைத் தானே குறித்து வைக்கிறேன் மீண்டும். விடை தெரியாப் புதிர்கள் அவன் உள்ளத்திலேயே குமிழிட்டன. அவள் யார்? அங்கு ஏன் வந்தாள்? தற்கொலை செய்து கொள்ளத்தானா? ஒருவேளை, எச்சரிக்கைக் கடிதத்தை வீசியவர் களுக்குத் துணை ஆளாகவே இருப்பாளோ அவளும்? இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். எதை உறுதியாகத் தீர்மானிக்க முடிகிறது?... அவன் மனம் குழம்பியதே தவிர, தெளிவு பிறக்கவில்லை. இரவில் நடந்தவற்றைப் பற்றி, அந்தப் பெண்ணைப் பற்றி, ரகுராமனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற புதிய பிரச்னை வேறு தலை தூக்கியது. இதையெல்லாம் இப்பவே சொல்லப்படாது. அவசரப்படுவானேன். பிறகு எப்பவாவது சொல்லிக் கொண்டால் போச்சு என்று முடிவு செய்தான். பிறகு, தானே தனது தீர்மானத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்தான் எச்சரிக்கை நோட்டிலை மட்டும் காட்டுவது என்றுதான். குறிப்பைப் படித்து முடித்த நண்பன் சொன்னான். நீ சொல்வது சரிதான். ஆனால் இந்தவிதமான கருத்துக்களுக்காக உம்மை யாரும் பாராட்டப் போவதில்லை' பாராட்டவேண்டாமே! "ஏசுவார்கள். தாக்குதல்கள் தான் நிறையக் கிடைக்கும். ரொம்ப நல்லது. எனது எண்ணங்கள் எவ்விதமான எதிரொலியும் எழுப்பாமல் ஒடுங்கி விடுவதை நான் விரும்பு வதில்லை. பலரது கவனத்தையும் கவரவேண்டும். பாராட்டுதல்களை மட்டுமே எதிர்பார்த்துப் பயனில்லை. யாரும் சுலபமாகப் பாராட்டுகள் வழங்க மனமிசைவதில்லை. ஆனால் ஏசுவதை எல்லோரும் அபாரமாகச் செய்யத்தயாராகயிருக்கிறார்கள். ஆகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/60&oldid=841426" இலிருந்து மீள்விக்கப்பட்டது