பக்கம்:செவ்வானம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 53 ஏச்சோ புகழ்ப்பேச்சோ - எதாகயிருந்தால் என்ன, என் பெயர் அடிபடவேண்டும். அது தான் முக்கியம். 'அதனால் நீர் அடிபட நேராமல் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதும் அவசியமே!’ என்றான் ரகுராமன். இருவரும் சிரித்தார்கள். நண்பனிடம் சிவப்பு எழுத்து எச்சரிக்கையைக் காட்டினான் தாமோதரன். அறையினுள் அது எப்படி வந்தது. யார் போட்டது என்று எதுவுமே தெரியாது எனவும் சொன்னான். ரகுராமன் முகத்திலே கவலை படிந்தது. "தாமோதரன், ஆபத்து நெருங்கி வருகிறது. நீ என்றும் போல் விளையாட்டுத் தனமாக இருப்பது நல்லதல்ல. உயிரையே பணயமாக வைத்து விபரீதங்கள் புரிவது மகிழ்வளிக்கும் பொழுது போக்கு ஆகாது" என்றான். 'நான் செய்வனவெல்லாம் சும்மா ஜாலியான பொழுது போக்குகள் என்றாநினைத்துக்கொண்டிருக்கிறாய்! அது தப்பு. அவை எனது தொழில், வாழ்க்கை எல்லாமே தான். தெரியுமா? என்று சொல்லிச் சிரித்தான் தாமோதரன். ‘எப்படியும் தொலையட்டும். இப்போ நாம் ஜாலியாக ஊர்ச் சுற்றப் போகலாமே என்றான் ரகுராமன், இருவரும் சென்றார்கள். - தாமோதரன் வீடு திரும்பும்பொழுது இரவில் எட்டுமணிக்கு மேலாகிவிட்டது. கதவைத் திறந்து விளக்கேற்றியதும் அங்குநிறைந்த ஒளி அறை நடுவே கிடந்த ஒரு பொருளைப் பளிச்செனக் காட்டியது. 'ஏதேது! நமது அறை இப்பொது அற்புதங்கள் முளைக்கும் இடமாக மாறிவிட்டது போலிருக்கே' என்று நினைத்தபடி அதை எடுத்துப் பார்த்தான். நீண்டகவர் அதனுள் கையெழுத்துப்பிரதி. பல பக்கங்கள். சரிதான். பத்திரிகை எதற்கோ அனுப்பவேண்டிய கதையை யாரோ தவறுதலாக எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/61&oldid=841427" இலிருந்து மீள்விக்கப்பட்டது