பக்கம்:செவ்வானம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 61 வந்து நிறுத்திய சந்தர்ப்பம் இனியும் நமது எதிர்பாராத சந்திப்புக்குத் துணை புரியாமலா போய்விடும் பார்த்துக் கொள்ளலாம் - குமுதம்.' இக்கடிதம் அவனுக்குச் சிரிப்பு அளித்தது, கடிதம் சுவையாகத் தானிருக்கிறது. அவளது வாழ்க்கையின் கதி எவ்விதமிருப்பினும், அதை ரசமாக எழுதியிருப்பாள் என்று தோன்றுகிறது என எண்ணினான் தாமோதரன். அப்புறமென்ன? அதைப் படிக்க வேண்டியது தானே! 'நான் சினிமா நட்சத்திரமல்ல. அதனால் எனது வாழ்க்கை வரலாறு பற்றி யாரும் அக்கறை காட்டப் போவதில்லை. நான் அரசியல் தலைவியோ, அதிகப்பிரசங்கியோ அல்லது வேறு எவ்விதத்திலும் பெயரும் பெரியதனமும் பெற்றுவிட்ட நபரோ அல்ல. ஆகவே எனது சுய சரித்திரம் எத்தனை பேர் கவனத்தைக் கவரும் என்று எண்ணிப் பார்க்கவேண்டிய அவசியமே கிடையாது. எனது வரலாற்றை நான் எழுதி வைக்கத் துணிந்தது பிறருக்கு எச்சரிக்கையாக உதவட்டுமே என்ற நோக்கத்தினால் அல்ல. வாய்விட்டுப் புலம்புவதை விட, காகிகத்தில் எழுதி எழுதி எனது மனப்புழுக்கத்திற்கு மாற்றுக் காணலாமே என்ற ஆசையினால்தான். சிலசமயங்களில் நான் ஏன் பிறந்தேன் என்ற ஏக்கம் என் நீங்காகத் துணையாகி வேதனை எழுப்புகிறது. பிறப்பு என் ஆட்சியில் இல்லை. ஆகவே எனது பிறப்பை நானே தவிர்த்திருக்க முடியாது. இதனால் அடுத்த கேள்வியாக நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது நான் ஏன் உயிரோடிருக்கிறேன் என்பது. வாழவேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இயல்பானது தான். ஆனால் வாழ முடியவில்லையே. வாழ முடியாதவர்களும் வாழ்கிறவர்களும் சேர்ந்து சில வேளைகளில், வாழ விரும்புகிற பிறரை நசுக்கிக் கொன்றுவிட முயல்கிறார்களே - அதற்கு என்ன சொல்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/63&oldid=841429" இலிருந்து மீள்விக்கப்பட்டது