பக்கம்:செவ்வானம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வானம் § 2 மனிதர்கள் சேர்ந்து வாழ்கிற பொழுதே பரஸ்பரம் போராடியும், த்திரவதை செய்தும் சாகடித்தும் தாம் மகிழ்ந்து போவதில் அதிக ற்சாகம் காட்டுகிறவர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. தங்கள் இனத்தைத் தாங்களே தின்று வாழும் சில ஜந்துக்கள் மாதிரிதான். ஆனால் ஒரேயடியாக விழுங்கி ஒழித்துக் கட்டிவிடுவதில்லை மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக-விதம் விதமாக - மற்றவர்களைத் துன்புறுத்தி இன்பம் காண்கிறார்கள். நான் ஏன் உயிர்வாழவேண்டும்? சாகத்துணிவு இல்லாததுதான் முக்கிய காரணம் நான் வாழ முடியவில்லையே. நான் அறியாத பாவத்தைப் பழியாக என்மீது சுமத்தி, என்னையே களங்கமாக - காளானாக மதிக்கிறார்களே. அதற்கு நான் என்ன செய்வது? இன்றைய நிலையிலே நான் நல்லவளாக வாழ முயல்வது குற்றம் உன் பிறப்பினால் நீ கெட்டவள். (உண்மையிலேயே, என்னைப் பெற்றுவிட்டவர்கள் கெட்டுப்போனவர்கள் தானா? அது வேறுவிஷயம்) ஆகவே நீயும் கெட்டு நாசமாவதற்கு தடையென்ன என்று யாரும் வெளிப்படையாகக் கேட்கவில்லை. பலரது பார்வையும் சிலரது செயலும் இந்த எண்ணத்தையே பிரதிபலிக்கின்றன இந்த சமுதாயத்தில் யோக்கியமானவர்கள் உருப்படமுடியாது. நல்ல பெயரும் எடுக்க முடியாது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. எனக்கு அதிக அனுபவமில்லை. இப்பொழுது எனக்கு G\Jiu Jg;! இருபத்துமூன்று தான். என்றாலும் இக்குறுகிய கால அனுபவமே எனக்கு எவ்வளவோ கற்றுத் தந்துள்ளது. 瑙 岔一 முழு மோச வாழ்க்கை நடத்தினாலும் அவர்களிடம் பணமும் பிறர்கண்களைக்கூசவைக்கும் படாடோபமும் இருப்பதனால் பலரை வியந்து பாராட்டுகிறது.இந்த உலகம் போற்றிப்புகழ்கிறதுசமுதாயம். பக்தியும் பஜனையும் பாடத்தயங்குவதில்லை எண்ணற்ற மனிதர்கள். சினிமாக்காரிகளை அவர்கள் நடத்துகிற வாழ்க்கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/64&oldid=841430" இலிருந்து மீள்விக்கப்பட்டது