பக்கம்:செவ்வானம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 63 கவனித்தாலே இது நன்கு விளங்குகிறது. சமூகத்தில் மிகச்சிலரேயான சினிமாச் சிங்காரிகளின் போக்கு வாழ வேண்டும் என்ற துடிப்புள்ள எத்தனையோ பெண்களைச் சீரழியும்படி துண்டுகிறது. அந்தப் பகட்டுக்காரிகளை எவரும் பழிப்பதில்லை. கெட்டவள். சமூக அஸ்தஸ்து குறைந்தவள் என்று சமுதாயம் ஒதுக்கி விடுவதில்லை. காரணம் அவர்களிடம் பணமும் புகழும் கூடி விட்டதுதான். ஆனால் யோக்கியமாக வாழும் என்னைப் போன்ற அபலைகளுக்குப் பிறப்பினால் வசதிகள் வஞ்சிக்கப்பட்டிருக்கிற காரணத்தினாலே வாழ்க்கையும் மறுக்கப்பட வேணும் என்று மதிக்கிறார்கள் எண்ணற்றோர். நீ கெளரவமாக வாழ அருகதை யற்றவள் என்று பழிக்கிறார்கள். விபசாரி மகள் என்று ஏசுகிறார்கள். விபசாரியின் மகளும் விபசாரியாகத்தான் வாழ வேண்டும் என்பது என்ன நீதியோ, தெரியவில்லை! அது கிடக்க, என் தாய் விபசாரிதானா? இல்லை என்று அறிவு உறுதி கூறும். ஆனால் குள்ள மனத்தினர் அங்கீகரிப்பதில்லை. தாலி கட்டிக் கொண்டால் தான் - அல்லது வேறு ஏதாவது சின்னங்கள் அணிந்து வாழ்ந்தால் தான் - கணவன் மனைவி என்று சமூகம் மதிக்கும். இல்லையெனில், வாழ்க்கை ஒப்பந்தம் என்று பத்திரப்பதிவு செய்து கொள்ள வேண்டும்."பெரியோர்கள் நிச்சயித்த படி சுபயோக சுபதினத்தில் தர்மங்களின் சாட்சியாகக் கணவன் மனைவியாகி வாழ்கிறவர்களின் சந்ததிக்குத்தான் உரிய அந்தஸ்து உண்டு இந்த சமுதாயத்திலே. ஒரு மனப்பட்டு வாழ்வதே திருமணம் என்று துணிந்து உண்மை அன்புகொண்டு புனித வாழ்வு வாழ்ந்தாலும் விபசாரமாகவே கருதப்படுகிறது மனிதவர்க்கத்திலே, தர்ம முறைப் படி கல்யாணம் செய்து கொள்கிறவர்களில் ஒரு சிலர் இருளிலே களங்கம் புரிந்தாலும் கூட, தர்மமும் அந்தஸ்தும் அவர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பளிக்கத் தயங்குவதில்லை. ஆனால் உண்மை அன்பிலே, உயர்ந்த வாழ்விலே, பூத்த அன்புச் சின்னங்கள் குப்பையில் வளர்ந்த செடிகளின் புஷ்பங்களாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/65&oldid=841431" இலிருந்து மீள்விக்கப்பட்டது