பக்கம்:செவ்வானம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 65 அதற்கு முன்னரே எனக்கு உற்றார் உறவினர் மீது வெறுப்பு வளர்ந்து வந்தது. என் தாயை அவமதிப்பாகப் பேசியதும், அவர்களின் மகள் என்பதனால் என்னை அலட்சியமாகக் கவனித்ததும் என் பிஞ்சு மனதிலே நீங்காத வடுவைப் பதித்து விட்டன. அவளுக்கு மகள் பிறந்திருப்பது சரியான புத்தி கற்பிக்கத்தான். அவன் அந்த மூதேவியை யாருக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவான், பார்க்கலாமே! சொத்து சுகமிருந்தாலும் ஏதோ ஏழை எளியவனைப் பார்த்துக் கட்டிக் கொடுத்து வீட்டோடு வைத்துக் கொள்ளலாம். அவனுக்கு அதற்கும் விதியில்லை. சரியான படிதிண்டாடப் போகிறான்' என்று பலரும் இழிவாகப் பேசியது என் காதிலும் விழுந்தது. என் தந்தையும் தாயும் இறந்த பிறகு என் நிலைமைதான் மிக்க கஷ்டமுள்ளதாயிற்று. இனி இந்தச் சவமும் அம்மாவைப் போலவே எவனோடாவது ஒடிப்போகும். இல்லையென்றால் இஷ்டம்போல் கண்டவன்கூட அலைந்து கெட்டுப் போகும்' என்று வாழ்த்தினார்கள் எல்லோரும். அவர்கள் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, நான் உயர்ந்தவளாய் நல்வாழ்வு வாழ்வது என உறுதி கொண்டேன். மணமாகாதவளாக வாழ நேரினும் சரியே, புனிதையாய் வாழ்வது என்று தீர்மானித்தேன். என் தந்தை விட்டுச் சென்றிருந்த பணம் நான் மேலும் படிப்பதற்கு உதவியது. அப்புறம் நான் வாழ ஏதாவது வேலை பார்த்தாகவேண்டுமே? ஆசிரியையாக மாறினேன். பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுப்பது போக, ஒய்வு நேரங்களில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர முயன்றபோது என் காதில் விழுந்த பேச்சுகள், அம்மம்மா! 'இருந்திருந்தும் இவளிடமா நம்ம பிள்ளைகள் படிக்க வேண்டும் அப்புறம் உருப்பட்ட மாதிரித்தான் இவள் புத்தி தான் பெண்களுக்கும் உண்டாகும். விபசாரி பெத்த மகள் தானே இவள் மட்டும் எப்படி நல்ல பெயரெடுத்து வாழப் போகிறாள்!' - இந்த செ. - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/67&oldid=841433" இலிருந்து மீள்விக்கப்பட்டது