பக்கம்:செவ்வானம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றை எல்லாம் அம்பலப்படுத்த எதிர்த்துப் போராட ஆசைப்படுகிற அவனால் உணர்ச்சிகரமாக, சூடாக, பேசவும் எழுதவும்தான் முடியும். எதிர்ப்புகளையும் பிறரது மனக்கசப்பு களையும் பொருட்படுத்தாது அதைத் தொடர்ந்து செய்கிறான் அவன். அவனது சிந்தனைகளை செவ்வானம் வெளிப்படுத்துகிறது. சமூகத்தின் பல சிக்கல்களுக்குகலப்புத் திருமணம், தாலி கட்டிக் கொள்ளாமலே ஆணும் பெண்ணும் இணைந்து குடும்ப வாழ்வு நடத்துவது போன்ற செயல்முறைகள் நல்ல வழி வகுக்கும் என்று வலியுறுத்தப்படுகிறது. மக்களின் அறிவு வளர்ச்சி பெறாத சமுதாயத்தில், சிந்தனைத் தெளிவும் விசால மனோபாவமும் பெற்றிராத மனிதர்கள் மத்தியில், இத்தகைய பரிகாரங்கள் உரிய பலனைப் பெற்றுத் தருவதில்லை; புதிய புதிய பிரச்னைகளை உற்பத்தி செய்கின்றன. அப்படி வாழத் துணிகிறவர்கள் அவர்களது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வாய்ப்புகள் கிட்டினாலும், அவர்களுக்குப் பிறகு அவர்களது பிள்ளைகள் - முக்கியமாகப் பெண்குழந்தைகள்- தற்கால சமூகத்தில் ஏகப்பட்ட சிரமங்களையும் தொல்லைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றை குமுதம் என்கிற பாத்திரத்தின் வாயிலாக எடுத்துக் காட்டுகிறது 'செவ்வானம். பண ஆசையும் புகழாசையும் அநேகரைப் பெரிதும் ஆட்டிப் படைக்கின்றன. பணபலம் பெற்றவர்கள் புகழ் மோகத்தினால் என்னவெல்லாமோ செய்ய முற்படுகிறார்கள். அப்படிப் பட்டவர்களின் போக்குகளையும கல்யாண குணங்களையும் செவ்வானம் சுவாரசியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. வாழ்க்கை நாடகத்தில் விதம்விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள் அவர்களது அன்றாடச் செயல்கள் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/7&oldid=841436" இலிருந்து மீள்விக்கப்பட்டது