பக்கம்:செவ்வானம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#$8 செவ்வானம் தாமோதரன் உள்ளத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவனுள் பம்மிக் கிடக்கும் வெறுப்பு மனித வர்க்கத்தின் மீது கவியும் கரிய விஷமேகமாக மாறி விடுமோ என்று அவன் அடிக்கடி எண்ணுவது உண்டு காலமும் சூழ்நிலையும் அவன் மனக்கசப்பை மனிதவர்க்கத்தைப் பாழ்படுத்தத் துணைபுரியும் தீய பண்பாக வளர்த்து தன்னையே தீயனாக மாற்றி விடுமோ என்ற நடுக்கம் அவனுக்கு எழுவது உண்டு. 'நல்லவர்கள் வாழமுடிவதில்லை. மனிதர் மனிதராகவாடி, வழியில்லை என்று முனங்கினான் அவன். தான் என்ன செய்யவேண்டும், எப்பொழுது சாப்பிடலாம் என்பன போன்ற அவ்வேளைய பிரச்னைகளை மறந்துவிட்டு நித்தியமாய் நிலைத்து நிற்கும் பல புதிர்களிலே சிந்தனையை அலையவிட்டு இயக்கமற்று உட்கார்ந்து விட்டான் தாமோதரன். 12 அன்பர் சிவசைலம் பக்திமானா அல்லது பம்மாத்துக்காரனா என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. புனிதப்பொருள் என்று கருதப்படுகிற வெண்பட்டு உடுத்து, மேலே பட்டாடை போர்த்துத்திகழும் அவர் கழுத்தில் துளபமணிமாலை தொங்கும். அவர் நெற்றியில் குங்குமப் பொட்டு சதா மிளிரும். சில்லறைத் தனமாகப் பேசத் தயங்காத அவர் மணிக்கணக்கிலே சிவபூஜை செய்வதும் உண்டு, கடவுளிடம் தனக்கு அதிக பக்தி; அதைப் போலவே கடவுளுக்குத் தன் மீது ரொம்ப அன்பு என்று பெருமையாகச் சொல்லித் திரிவார் அவர், அப்பொழுதுதான் அவர் திருப்தியாய்ச் சாப்பிட்டு முடித்து. வயிற்றின் மகிழ்வை நீண்டஏப்பமாக ஒலிபரப்பியபடிநாற்காலியில் சாய்ந்திருந்தார். வயிற்றப்பர் முனங்காமல் இருப்பதற்காகவோ வெறும் வாய்க்கு வேலை கொடுப்பதற்காகத்தானோ அவர் வெற்றிலை போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/70&oldid=841437" இலிருந்து மீள்விக்கப்பட்டது