பக்கம்:செவ்வானம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 69 அவரைத் தேடி வந்து, ரகசியமாகச் செய்திகள் சொல்லிவிட்டு விடைபெறக் காத்து நின்றனர் இருவர். முந்திய இரவிலே இருளோடு இருளாகச் சென்று தாமோதரனுக்கு எச்சரிக்கைச் சீட்டை வெற்றிகரமாகச் சமர்ப்பித்த வீரத்தனத்தைப் பற்றித்தான் பெருமை யாகச் சொல்லி முடித்தார்கள் அவர்கள். அவரது பாராட்டுதலையும் கொஞ்சம் சில்லரைக் காசையும் பெற்றுப் பல்லைக் காட்டி நின்றனர் திடீரென்று நினைவிலே ஒளி தெறித்தது போல் இன்னொரு விஷயம், எஜமான் என்று தொடங்கினான் ஒருவன். 'என்ன? என்று உறுமினார் சிவசைலம். "தாமோதரன் நேற்றிரவு ஒரு காதல் நாடகம் நடித்துக் கொண்டிருந்தான் என்று இழுத்தான் அந்த ஆள். 'காதல் நாடகமா? சகுந்தலையா அல்லது பவளக்கொடியா? என்று கேட்டு வைத்தார். எப்பொழுதும் நாடகம் சினிமா முதலிய வைகளைப் பற்றியே எண்ணி மகிழும் அனுபவஸ்தர். 'அந்த மாதிரி நாடகமில்லை. நிஜமாக அவன் ஒரு பெண்ணுடன்...' ‘என்னது' என்று நிமிர்ந்தெழுந்து நாடகமேடை ராஜாமாதிரி ஸ்டைலாக உட்கார்ந்த சிவசைலம் இதை அப்பொழுதே ஏன் சொல்லவில்லை? என்ன நடந்தது? யார் அந்தப் பெண்?' என்று படபடத்தார். 'அவள் யாரோ தெரியாது. இருட்டுநேரம் பாருங்க. இனம் தெரியலே! 'பின்னாலேயே போய் யாரென்று பார்த்து வருவதற்கென்னடா மடையா?' என எரிந்து விழுந்தார் அவர், "நாங்க போகலாம்னு தான் பார்த்தோம். ஆனால் அது நமக்கு முக்கியமில்லை பாருங்க!' என்று பணிவுடன் அறிவித்தான் அந்த நபர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/71&oldid=841438" இலிருந்து மீள்விக்கப்பட்டது