பக்கம்:செவ்வானம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 71 'இல்லையாவது நொள்ளையாவது அந்தப் பெண் யாருன்னு தெரியுமா? என்று கேட்டார் அவர், அந்தப் பொண்ணுதாங்க. ஒரு வேலையிலே நிலைச்சிருக்க மனமில்லாமே வாத்தியாரம்மா, டைப்பிஸ்டு, ஒரு வீட்டிலே குழந்தைக்குத் தாதியாக - இப்படிப் பல வேலை பார்த்துக் காலம் கழிக்கலே? வயசென்ன இருபது இருபத்து மூணு இருக்கும். பார்க்கிறதுக்குக் கொஞ்சம் லெட்சணமாகத் தானிருக்கும் என்று 'பாரதம் படிக்கத் தொடங்கினான் அவன். - நிறுத்து உன்கிட்டே இதை யாரு கேட்டது? ஒன்று கேட்டால் நீ பாட்டுக்கு ஒன்பது பொழிந்து தள்றியே! என்று அவன் பேச்சுக்குத் தடை போட்டார். சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு அவரே தொடங்கினார்; உம் அவளா? சரிதான். அப்புறம் என்ன நடந்தது? 'வீட்டிலே அவன் இல்லை என்று தெரிந்ததும் அவள் திரும்பி விட்டாள் என்றான் இரண்டாவது ஆள். 'ஏய், புரியாமல் பேசுறியே. இன்றைக்கு நடந்ததையா கேட்டேன் இப்போ? நேற்று ராத்திரி என்ன நடந்ததுன்னு விசாரித்தால்..." முதல் ஆசாமி நடந்ததை அவன் கற்பனையில் பதிந்திருந்தபடி எடுத்துச் சொன்னான். 'இரண்டு பேரும் கிணற்றடியிலே தான் நின்றாங்களா? வீட்டுக்குள்ளே போகவேயில்லையா?' என்று வருத்தத்துடன் விசாரித்தார் சிவசைலம், 'இல்லை. நாங்கள் எச்சரிக்கைக் குரல் கொடுக்கவும் உஷாராயிட்டாங்க, அவள் தன் வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்' அவர்கள் எதிர்பாராத விதமாக 'லொள் என்று பாய்ந்து விழுந்தார். சிவசைலம். மடையன்கள்! நீங்கள் ரெண்டுபேரும் வடிகட்டித் தெளித்தெடுத்த அசல் நயம் மடையர்கள்தான். அதிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/73&oldid=841440" இலிருந்து மீள்விக்கப்பட்டது