பக்கம்:செவ்வானம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 73 முறையல்ல என்று போதித்தது அதனால் காத்துநின்ற காரிலேறி வேகயாத்திரை செய்தார் ஆலோசகர். 13 உணர்ச்சியின் உந்துதலினால் ஒரு காரியத்தைச் செய்துவிட்டு பிறகு அதை நினைத்து மனதைக் குழப்பிக் கொண்டிருக்கும் பண்பு பொதுவாக எல்லோரிடமும் காணப்படுவது. குமுதம் அதற்கு விதிவிலக்கு அல்ல. - உணர்ச்சி கொதிநிலை அடைந்து விட்டதனால் இனி சகித்து வாழ முடியாது. உயிர்க்குமிழி அன்றுடன் வெடித்துவிடுவது நல்லது என்று நினைத்தாள் அவள். சந்தர்ப்பம் சாகவிடாமல் துணை புரிந்ததும்'இதுவும் நன்மைக்கே என்று நம்பினான். தன்னைச்சாகாது காப்பாற்றியவன் தனக்கு வாழ வழிகாட்டமுடியுமா? எதற்கும் அவன் தன்னைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது என்று ஆசைப்பட்டாள். அந்த எண்ணம் துண்டவும் அவனைக்கண்டு தன் கதையைக் கொடுத்துவரக் கிளம்பிய குமுதத்தின் துணிச்சல் சிறிது சிறிதாகத் தேய்ந்துவிட்டது. அவனைச் சந்திக்கப் போவது - தானாகவே முன் செல்வது நல்லதா என்ற பிரச்னை அவள் உள்ளத்தில் குதித்தது. அவன் நல்லவனாகத்தான் தோன்றுகிறான் என்று நினைத்தாள் அவள். ஆனால் நன்கு பழகத் தெரியவில்லை என அனுபந்தம் இணைத்தது மனம். 'ஒரு தடவை பார்த்ததுமே நல்லவன் என்று எப்படித் தீர்மானிப்பது. எத்தனையோ பேர்தான் நல்லவர்களாகத் தோன்று கிறார்கள். உண்மையில் எத்தர்களும், ஏமாற்றுக்காரர்களும் தான் அதிகம் என்பது அனுபவத்தின் மேல் தான் தெரிகிறது என்று புலம்பியது அனுபவச் சூடு பெற்று வதங்கியிருந்த மனம் வாழமுடியும் என்ற நம்பினவள்தான் அவள். அதற்காக உழைத்தாள். ஆனால் அவள் ஆசை நிறைவேறும்படி மற்றவர்கள் உதவி புரியவில்லை. துரத்தி வரும் கொடுமையிலிருந்து விலகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/75&oldid=841442" இலிருந்து மீள்விக்கப்பட்டது