பக்கம்:செவ்வானம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 செவ்வானம் யோடிப் பதுங்குமிடம் வெவ்வேறு தேடிக்கொண்டாலும், அங்கும் புதுப்புதுக் கொடுமைகள் பிறப்பதை உணர்ந்து பதறி மீண்டும் உயிர் தப்ப ஓடுகிற பலமற்ற பிராணி மாதிரித்தான் தானும் என எண்ணினாள் அவள் கெளரவமாக வாழ்வதற்காக இடம் விட்டு இடம், வேலை மாறி வேலை என்று அலைந்தாள்.அவள். வேலையின் தன்மையும் பெயரும், அதை நிர்வகிப்பவர்களின் உருவமும் போக்கும் விதவிதமாக இருந்தாலும் அடிப்படையில் ஒரே பண்புதான் உள்ளார்ந்து கிடந்தது என்பதை அவள் உணர்ந்தாள். எவ்வகையிலாவது பிறரைத்தனக்குப் பயன்படுத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் ஒதுக்கிவிடுவதிலேயே பலரும் கருத்தாக யிருக்கிறார்கள். அவர்களிடையே பழகி வாழ்வது சிரம சாத்தியமானதுதான் நல்லவர் என்றால் ஏமாறத் தகுந்தவர் - ஏமாற்றப்படவேண்டியவர் என்றே வாழத் தெரிந்தவர்கள் மதிக்கிறார்கள். அந்நிலையிலேதுணையற்ற ஒருபெண்புனிதையாய் வாழ்வது எப்படி? தன்னையே காத்துக்கொள்வது எப்படி? இதே கேள்விகள் தான் ஒவ்வொரு நாளும் அவளை அலைக்கழித்தன. அந்தப் பிரச்னைகள் தீர்ந்துவிடவில்லை. இன்னும் அதிகமாக வளரும். இனி எவ்விதம் வாழ்க்கை நடத்துவது தினசரி பிழைப்பை நடத்துவது எப்படி? எண்ண எண்ண அவளுக்கு மூளைக் குழப்பம் ஏற்படும் போலிருந்ததே தவிர, ஞானோதயம் ஏற்படவில்லை. பிழைப்பு நடத்துவதற்காக அவள் வேலை பார்த்தாள். ஆனால் தன்மானம் பறிபோவதை அறிந்து ஒவ்வொரு வேலையையும் உதறிவிட்டு வந்தாள். வாத்தியாரம்மா, டைப்பிஸ்டு, கிளார்க்கு என்று லேபிள்கள் அடிக்கடி மாறியும் வாழ்க்கைத்தரம் ஒரே மாதிரி தானிருந்தது. அவள் உழைப்பை விலைக்கு வாங்கியவர்கள் அவளையே விலைக்கு வாங்கி விட்டவர்கள் போல் பேசி நடக்கத் துணிந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் சிணுங்குவாள். சீறுவாள். எரிந்து விழுந்து ஏசுவாள். இத்தகையவர்கள் வேலை பார்க்கவரக்கூடாது. வீட்டிலே வாசல் படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/76&oldid=841443" இலிருந்து மீள்விக்கப்பட்டது