பக்கம்:செவ்வானம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 75 தாண்டாத பத்தியாக வாழத்தான் லாயக்கு துணிந்து வேலைக்கு வந்தால் தாராளமாகப் பழகவேண்டியதுதான்' என்று வழிகாட்டிகள் சிலர் முனங்கினார்கள். அவள் தனிமையில் மனச்சுமை கரைவதற்காக அழுது தீர்த்தாள், நிலைமையைச் சமாளிப்பதே பெரும் வேதனை என்ற நெருக்கடி வந்ததும் தான் வேலையை விட்டுவிட்டாள். எத்தனை நாட்கள் பட்டினி கிடக்க முடியும்? இப்பொழுதும் இதே நிலைதான், இனி என்ன செய்யலாம்? என்று துடித்தது மனம். அவரைத்தான் கேட்க வேண்டும். அவர் பெயர் தாமோதரனாமே!, என்ற எண்ணம் எழுந்து. நானிருக்க பயமேன்! அவசியம் ஏற்படுகிறபோது நினை. நாம் வந்து அருள் புரிவோம் என்று கடவுளின் அவதாரம் மாதிரிப்பேசினாரே நேற்று' எனச் சிரித்தது மனம். தாமோதரனைச்சந்திக்கலாம் என்று புறப்பட்டவள் உள்ளத்தில் எழுந்த தயக்கம் அவள் நடையிலே தளர்வு புகுத்தியது. போகாமலே திரும்பிவிடலாமா என்று கூட நினைத்தாள். எப்படியும் யார் துணையையாவது பெற்றாக வேண்டுமே என்ற அவசியம் தான் அவளைத் தள்ளிச் சென்றது. அவனிடம் அதிகம் பேச வேண்டியதில்லை. கடிதத்தையும் வரலாற்றையும் கொடுத்துவிட்டுத் திரும்ப வேண்டியது தான் என்று நினைத்து நடந்தாள். அவள் வந்த நேரத்தில் அவன் வீட்டில் இல்லாமல் போனது அவளுக்கு மகிழ்வு தந்தது. ஏதோ விபத்திலிருந்து தப்பிவிட்டவள் போல் நிம்மதியாய் நெடுமூச் செறிந்தாள். கடிதத்தையும் குறிப்புக்களையும் ஜன்னல் வழியாக உள்ளே போட்டு விட்டுத் திரும்பினாள். அதிலிருந்து அவளுக்கு அதே துடிப்புதான். அதைப் படித்ததும் அவர் என்ன நினைப்பாரோ? அவர் அபிப்பிராயத்தை நான் எப்படி அறிவது? அதில் எனது விலாசம் கூட எழுதவில்லையே! என்ற எண்ணமும் எழும். அதை அவர் பார்வைக்கென்று அங்கு கொண்டுபோய் போட்டது தவறு. எனது கவலை எனக்கு என்று இருந்திருக்கலாம் என்றொரு நினைவு பிறக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/77&oldid=841444" இலிருந்து மீள்விக்கப்பட்டது