பக்கம்:செவ்வானம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 செவ்வானம் தாமோதரனைச் சந்தித்துப் பேசவேண்டும் என்ற ஆசை தலை துக்கும் அந்த எண்ணமே தப்பு என்றொரு எண்ணம் கண்டனக்குரல் எழுப்பும் தனது எண்ணச் சுழிப்பிலேயே திண்டாடிக் கிடந்தாள் <邻剑守事。 14 இரவு மணி எட்டு. அன்பர் சிவசைலம் முதலாளியின் வீட்டிற்கு வந்தபோது எதிர்பாராத இனிமைகளைக் கண்டார். உடனே தான் நாம் வந்தது நல்லதாயிற்று வரமுடியவில்லை என்று சொல்லி அனுப்பியிருந்தால் அந்த முட்டாள்தனத்திற்காக நான் அடிக்கடி எனக்கே அனுதாபம் தெரிவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்' என்று நினைத்துக் கொண்டார். ஆகா, நாடகமேடைக் காட்சி மாதிரியே இருக்கிறதே! என்று வியந்தார் அவர். ஆமாம் அதற்கு ஒத்திகைதான்' என்று ஆமோதித்தார் முதலாளி புன்னைவனம். - அலங்கார பவனமாக மிளிர்ந்த அந்த விசாலமான அறை விசேஷ சிரத்தையுடன் தயாரிக்கப்பட்ட சினிமாக்காட்சிபோல் தானிருந்தது. படங்களும், ஆடம்பர குளோபு லஸ்தர்களும், எலெக்டரிக் விளக்குகளும், நாற்காலிகள், லோபாக்கள் முதலியன வும் அறையின்காம்பீர்யத்திற்கு அழுத்தம் கொடுத்து விளங்கின. நடுநாயகமாகத் திகழ்ந்த நாற்காலி ஒன்றிலே கொலுவிருந்தார் முதலாளி, கருமெழுகிலே திரட்டி எடுத்தது போன்ற உருவம் பணப் பெருக்கும் குறையாத ஊட்டமும் அவர் உடலை வாட்டமில்லாமல் வளர்த்து வந்தன. அவருக்கு வயது ஏறக்குறைய ஐம்பதைத் தொட்டிருக்குமென்றாலும், ஆளைப்பார்த்தால் அவ்வளவுக்குமதிக்க முடியாது. நாற்பது, நாற்பத்து இரண்டு வயசு இருக்கும் என்றுதான் சொல்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/78&oldid=841445" இலிருந்து மீள்விக்கப்பட்டது