பக்கம்:செவ்வானம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 செவ்வானம் நாற்காலியிலமரும்போதே மந்திரி பிரதானிகளைக் கவனிக்கும் நாடகராஜாபோலப் பார்வை எறிந்துவிட்டு 'உம். இவாள்ளாம் யாரு என்று விசாரித்தார். கந்தர்வ கலைக் கழகம் என்ற பெயரிலே நாடகசபா தொடங்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோமே. அதை நான் சில நண்பர்களிடம் சொல்லி வைத்தேன். நம்ம பிரண்டு ஒருவருக்கு இவரை நன்றாகத் தெரியுமாம். இவரிடம் சொல்லியிருக்கிறார். இவர் தனக்குத் தெரிந்த நடிகையரை அழைத்து வந்திருக்கிறார். இவர்கள் தான் நடிகைகள் என்று காட்டினார் முதலாளி. செம்பருத்திப் பூ போல் கண்ணை உறுத்தும் வர்ணப் பகட்டுகளுடன் திகழ்ந்த சிங்காரி சொன்னாள்: 'என் பெயர்சாவித்திரி, இவன் பெயர் சியாமளா, இந்தப் பெண் பெயர் சந்திரா. ரொம்ப சந்தோஷம் என்று கூறிய சிவசைலம் நண்பரின் பெயரை அறிந்து கொள்ளலாமோ? என்று கேட்டார் 'என் பெயர் தானே? கேசவன் என்றான் அவர்களை அழைத்து வந்தவன். ಸಿಪಿ55 TಖGಖTRL T க்கக உண்டா? 1 க்கிே நீங்கள் எல்லோரும் எங்காவது நடித்தது உண்டா? படத்திலே கிடத்திலே?" 'ஒ' எத்தனையோ நாடகங்களில் நடித்திருக்கிறோம். ஒன்றிரண்டு சினிமாவிலே கூட ஆக்ட்பண்ணியிருக்கோம் என்றாள் சாவித்திரி. இதைச் சொல்வதற்குள் அவள் தலையும், கண்களும், கைகளும் எவ்வளவோ ஆட்டம் ஆடித் தீர்த்தன. எக்ஸ்ட்ரா வேஷம் போலிருக்கு' என அலட்சியமாக மொழிந்தார் சிவசைலம். 'இல்லை இல்லை. நான் ராணியின் தோழியாக வந்திருக் கிறேன்? என்று மறுப்பு விடுத்தாள் சிங்காரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/80&oldid=841448" இலிருந்து மீள்விக்கப்பட்டது