பக்கம்:செவ்வானம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 செவ்வானம் சிவசைலம் நீண்டலெக்சரடித்துவிட்டு என்னநான் சொல்றது? என்று முதலாளி பக்கம் திரும்பினார். ஆமாமா செய்ய வேண்டியது தான் என்று தலையாட்டினர் அவர் நடிப்புச் சர்வாதிகாரி ராமண்ணா அடிக்கடி சொல்கிறார் - நாடக்கலை, மேடைஉத்தி, வெளிச்சம் போடுதல்கள் எல்லாம் நம் நாட்டிலே முன்னேறியிருக்கிற அளவுக்கு வேறு எங்குமே வளரவில்லை. இதை உலகத்திற்கு உணர்த்த வேண்டியது நமது கடமை...' சிவசைலத்தின் வேகப் பிரசங்கத்திற்குச் சிறு தடை விதித்தாள் சாவித்திரி ஒரு சிறு கேள்வியைக் கேட்டு ஒரு சந்தேகம், ஸார் என்றாள் அவள். என்ன? என்று உறுமினார் அவர். நடிகர் ராமண்ணா உலகம் சுற்றி வந்தவரா ஸார்? அவள் இயல்பாகத் தான் கேட்டாள். ஆனால் அதில் குறும்பு தொனிப்பதாக நினைத்தார் அவர். 'அவனாவது உலகம் சுத்றதாவது திருப்பதிக்கு வடக்கே போனதில்லை. அவன் கம்பெனி திவாலாகி, மறுபடியும் தொடங்கின போது திருப்பதிக்குப் போனான், தலையை மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்துவதற்குத்தான். அப்புறம் அவனே பெரிய ஆசாமிகளின் தலையைத் தடவி மொட்டையடிப்பதைக் கலையாகக் கைக்கொண்டு விட்டான். அவனுக்கு தமிழே சரியாக எழுதப்படிக்கத் தெரியாது. ஆங்கிலம் தெரியவே தெரியாது. பேசுறது என்னடான்னா உலகத்தையை பூராவும் கண்டுவிட்ட மாதிரித்தான்! என்று கேசவன் பேசியது சிவசைலத்தின் ஆத்திரத்தைத் துண்டி விட்டது. 'நிறுத்தய்யா. உனக்கு ராமண்ணாவைப் பிடிக்கவில்லை யென்றால் தாறுமாறாகப் பேசவேண்டாம் தெரியுதா? என்று சீறிப்பாய்ந்தார் அவர். பெரிய மனிதரின் தயவை எதிர்பார்த்து வந்திருக்கிறோம். அதனால் பெரியமனிதரது லோட்டாவின் தயவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/82&oldid=841450" இலிருந்து மீள்விக்கப்பட்டது