பக்கம்:செவ்வானம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 செவ்வானம் தாமோதரன் சிறு தெருக்கள். பெரிய வீதிகள் எங்கும் சுற்றி விட்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தான். திடீரென்று அவன் பதறியடித்துப் பாதையோரத்திற்குத்துள்ளநேர்ந்தது. அவன் உயிரை வாங்குவதற்கென்றே பதுங்கி வந்தது போல் தோன்றிய கார் ஒன்று அவனுக்குப் பின்னால் மிக நெருங்கி வந்து நின்றது. பளிச் செனப் பிரவாகித்த ஒளி முன்பு ஒடுங்கியிருந்து அப்போதுதான் அதிகச்சக்தி பெற்றிருக்க வேணும் என்று தோன்றியது அவனுக்கு. 'எதிர்பாராது கவ்வ வந்தது சாவு' எனும் உணர்ச்சி அவன் உடலில் உதறல் விளைவித்தது.நெஞ்சிலே உதைப்பு எடுத்தது. 'மரணம் முன் வராதபோது சாவையும் ஏற்கத் தயார் என்று அடித்துப் பேசிவிடலாம். ஆனால் மரணம் விளையாட்டுக்காகவேனும் கை நீட்டுகிற போது உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுகிற அதிர்ச்சி, அம்மம்மா உயிராசை பயத்தைக் கிளறி விடுகிறது என்று அந்நேரத்திலே கூட அவன் சிந்தனை முனங்கியது. உயிராசை, பயம் என்ற எண்ணப் பொறி குமுதத்தைப் பற்றிய நினைப்பை எழுப்பியது. முன்தின இரவிலே அவள் சாகும் நினை வுடன் வந்து சாகத் துணியாமல் நின்றபோது அனுபவித்திருக்கக் கூடிய மன வேதனையை அவன் ஒருவாறு உணர முடிந்தது. தன் நினைவிலே தானாகி நின்றுவிட்ட தாமேதரன் திடீரென வந்து நின்று பின் உறுமிக்கொண்டு புறப்பட்ட காரைக் கவனிக்கவேயில்லை. அவன் கவனத்தைக் கவர்வதற்காகக் கனைத்தது ஒரு குரல். 'அஹஹ, அறிவின் கை விளக்கா பேஷ்' எனப் பிறந்த பேச்சு அவனைத் திடுக்கிட வைத்தது. காரினுள்ளிருந்தது யாரெனப் புலப்படவில்லை. மங்கல் ஒளிதான் நிலவியது உள்ளே, 'என்ன தோழரே! ரோட்டை நந்தவனம் என்று எண்ணி வீட்டீரோ அல்லது காதலி குமுதத்தின் நினைவினால் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/86&oldid=841454" இலிருந்து மீள்விக்கப்பட்டது