பக்கம்:செவ்வானம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 செவ்வானம் தள்ள வந்த காரிலிருந்த ஆசாமி என்ன, காதலி குமுதத்தின் நினைவா!' என்று கிண்டலாகச் சொன்னது தாமேதரனுக்கு அதிர்ச்சியாகத் தானிருந்தது. தனது எண்ணத்தைக் கண்டு சொன்னது யார், அவனுக்கு அந்த அதிசய சக்தி எப்படி வந்தது என்ற குழப்பத்துடன் மடையன் காதலி குமுதமாம் என்ன உளறல் இது என்ற ஆத்திரமும் பிறந்தது. அப்படிப் பேசியது சிவசைலம் என அறிந்ததும் அவனுக்குக் கோபம் பொங்கியது. குழப்பம் ஏற்பட்டது. ‘இவனுக்கு எப்படித் தெரியும்? குமுதம் பற்றி நான் எண்ணுவேன் என்று இவன் ஏன் நினைத்தான்? நேற்று இரவு குமுதம் தற்கொலைசெய்து கொள்ள முயன்றதைத் தடுத்துநிறுத்தி அவளுடன் நான் பேசிக்கொண்டிருந்தை யாரோ கள்ளத்தனமாகக் கவனித்ததாகத் தெரிந்ததே. அவர்களில் சிவசைலமும் ஒருவனோ என்னவோ இவன் இல்லாவிட்டாலும் இவனுடைய ஆளாக இருக்கலாம் என்று நினைத்தான் தாமோதரன், 'இப்படிநேரும் என்று எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு சீக்கிரமே எதிரொலி கிளம்பும் என்று எண்ணவில்லை என அவன் மனம் முனங்கியது. எப்படியும் போகிறது என்று ஒதுக்கிவிட்டான். இரவிலே மறுபடி குமுதத்தை எப்பொழுது எங்கே காணலாம் என்ற துடிப்பு உள்ளத்தில் மிதந்தது. சரி, பார்க்க முடிந்தபோது பார்த்துக் கொள்வது என்று அதையும் தள்ளிவிட முயன்றான் அவன். விடிந்த பிறகு மீண்டும் அந்த ஆசை தலை துக்குவதற்கு முன் அவளே தோன்றிவிட்டது அவனுக்கு வியப்பாகத் தானிருந்தது. ஆனால் வேதனை அளிக்கவில்லை. ஆகாய நீல வர்ணச் சேலையணிந்து முகத்திலே மகிழ்வும் நாணமும் கொஞ்சி விளையாட அவள் மெது நடை நடந்து வந்தது வசீகரிக்கும் இனிமையாகத் தானிருந்தது. ஏது இந்தப் பக்கம் மறுபடியும் கிணற்றில் விழுந்து சாகலாம் என்று வந்தாயோ? என்று கேட்டான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/88&oldid=841456" இலிருந்து மீள்விக்கப்பட்டது