பக்கம்:செவ்வானம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 37 'அந்த ஆசை ஏற்பட்டால் கூட திரும்பவும் இந்த கிணற்றைத் தானா தேடி வரவேண்டும் ஊரில் எத்தனையோ நல்ல கிணறுகள் இருக்கின்றன என்றாள் அவள். 'இது மோசமான கிணறா பின்னே! நேற்றிரவு கரையில் நின்றபடியே அதைக் கண்டுபிடித்து விட்டாய் போலிருக்கிறது: கிணறு எப்படியோ ஆனால் சூழ்நிலை சுத்த மோசம் என்று சொல்லிச் சிரித்தாள். 'என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறாய் என்று புரிகிறது: கிணறுகூட மோசமானது தான். நல்ல கிணறு என்றால் அடைக்கலம் புக வந்த பிறகும் வரவேற்காமல் மெளனமாகயிராது. அப்படித்தானே? அதனால்தான் சூழ்நிலை மோசம் என்றேன். தேடிவந்தால் வரவேற்பதற்கு யாரும் கிடையாது. வீடு அடைத்துக்கிடக்கும். காப்பாற்றி விட்டதாக மகிழ விரும்புகிறவர்கள் அப்புறம் கவலைப்படுவதேயில்லை. பிழைத்தவர்கள் எப்படி வாழ்வது என்று மற்றவர்கள் ஏன் கவலைப்படப்போகிறார்கள்! உன்னைக் காப்பாற்றியாச்சு எனக்குப் புண்ணியம் அது அப்புறம் நீ எக்கேடு கெட்டாலென்ன ஒரேடியாகச் சாவதைத் தடுத்து தினசரி செத்துக் கொண்டு நாளைக்கழிக்கும்படி செய்வதே எங்கள் லட்சியம் என்ற நம்பிக்கை போலிருக்கு என்றாள் அவள் அவள் பேச்சு அவனுக்கு எரிச்சல் உண்டாக்கியது. 'அம்மணி' என்று ஆரம்பித்தான் அவன். குறும்புச் சிரிப்பு சிந்தியபடி என்பெயர் அது இல்லையே! என் பெயர் கூட மறந்துபோச்சா அதற்குள்ளே?' என்று கேட்டாள். சிரிக்கும் அவள் முகம் சிவக்கும்படி சூடான பதில் கொடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது அவன் உள்ளத்தில் இருந்தாலும் மனம் வரவில்லை. பெயர் எதுவாகவுமிருக்கட்டும். தேவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/89&oldid=841457" இலிருந்து மீள்விக்கப்பட்டது