பக்கம்:செவ்வானம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 செவ்வானம் திருவுளமிசைந்து அதிகாலையிலேயே திவ்ய தரிசனமளிக்க இங்கு வரக்காரணம் என்னவோ?’ என்றான். சொல்லலாம் ஆனால்..' என்று இழுத்தபடி, தலையைச் சாய்த்து கோணப் பார்வை ஒன்றை ஏவி விட்டுச் சிரித்தாள் அவள். 'இவள் இப்படித் துணிந்து விடுகிறது. அப்புறம் ஆண்கள் அயோக்கியர்கள், சமுதாயம் சுத்த மோசம். ஆஹன என்று ஒப்பாரி வைக்கிறது. மூதேவிமோறையைப் பாருங்கடாமோறையை' என்று சீறியது அவன் உள்ளம் அந்த எண்ணமே அவனுக்குச் சிரிப்பை எழுப்பி விட்டது. "என்ன சிரிக்கிறீர்கள்?' என்று வினாவினாள் அவள், 'சிரிப்பதற்குக் கூட அம்மாவிடம் உத்தரவு பெற வேண்டுமாக்கும்' 'என் முன்னால் நின்று கொண்டு சிரித்தால் என்ன அர்த்தமாம்? என்று சிணுங்கினாள் அவள். சிரிப்பு வந்தது சிரித்தேன்: ஆமாம். சிரிப்பாணிக்கு ஆளாக வேண்டிய பிழைப்புதானே எனக்கு என்று முனங்கினாள் குமுதம் அவள்முகத்தைப் பார்த்தால், இன்னுமொரு வார்த்தை சொன்னால் அழுதுவிடுவாள் என்று தோன்றியது. பனியில் நனைந்து குளுகுளுவென்றிருந்த மலர் வெயிலில் காய்ந்து வதங்கிவிட்டது போல் திடீர் மாற்றம் காட்டியது அவள் முகம், 'ஐயோ பாவம்' என்று நினைத்த தாமோதரன் சொன்னான்: உனது குறிப்புகளைப் படித்தேன். உன் வாழ்க்கை நிலைமையை உணர்ந்து வருந்துகிறேன். அதைப் படித்த பிறகு உனது வேதனை எனது சிந்தனைக்குரிய பெரும் பிரச்னையாகி விட்டது. அது சமுதாயப் பிரச்னையாகும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/90&oldid=841459" இலிருந்து மீள்விக்கப்பட்டது