பக்கம்:செவ்வானம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 89 'சமூகம், பிரச்னை, சிந்தனை என்று பெரிதாகப்பேசவேண்டாம் இப்போதுள்ள நிலையில் அதெல்லாம் எனக்குப் புரியவும் புரியாது நான் வாழவேண்டும். அதுதான் எனக்கு முக்கியமான விஷயம். நான் எழுதியிருந்ததைப் பூராவும் படித்திருப்பீர்கள். நான் கெளரவமாக வாழ உங்களால் வழிகாட்டமுடியுமா? யோசிக்க வேண்டிய விஷயம்தான் என்றான் தாமோதரன் அவன் முகத்தில் கவலையின் ரேகைகள் படிந்தன குமுதம் சிரித்தாள். ஏளனம் தொனித்தது அதில், ஹ9ங்! இனிமேல் தான் யோசிக்கவேண்டுமாக்கும்? நீங்கள் யோசித்து ஆராய்ந்து முடிவு பண்ணி வழிகண்டு பிடிப்பதற்குள் நான் பட்டினியால் கஷ்டப்பட்டுச் செத்தே போவேன்' என்றாள். இது மாதிரிப் பிரச்னைகளைப் பற்றி தீர யோசிக்காமல் நான் எப்படித் திடுதிடுப்பென்று பதில் சொல்ல முடியும்? நீங்கள் என்ன! உங்களைப் போல் வெறும் பேச்சுப்பேசி புகழ் பெறுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் சேவை, லட்சியம், சமூகம், நாடு, சர்வதேசீயம் என்று நீட்டி முழக்காமல் எந்த விஷயத்தையும் கவனிக்க முடியாது. பக்கத்து வீட்டில் பட்டினி கிடப்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது கிடையாது. தெருவில் பிச்சை எடுத்து அலைந்து ஒவ்வொரு வேளைச் சோற்றுக்கும் உயிர் போகும்படிகத்துகிறவர்களின் ஏக்கம் இரக்கத்தை எழுப்பாது, இதையெல்லாம் குறிப்பிட்டால், நாட்டு நிலைமையும் இன்றுள்ள கால நிலைமைகளும் பொருளாதார பேதங்களும் என்று தொடங்கி லெக்சரடிப்பீர்கள்...' இப்பொழுது நீ செய்வதும் அதே காரியம் தான் என்றான் தாமோதரன். அவன் அமைதியாகச் சொன்னது அவளுக்குச் சிரிப்பு தந்தது. 'உங்களுக்குக் கோபமே வராது போலிருக்கு என்றாள். 'நான் அவ்விதம் சொல்லவில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/91&oldid=841460" இலிருந்து மீள்விக்கப்பட்டது