பக்கம்:செவ்வானம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 91 பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ளம்மா என்று தான் போதிக்க முடியும் இவனால், இந்த மனிதவர்க்கத்திலே வந்தமற்றுமொரு பதார்த்தம் தானே இவனும் இல்லாவிட்டால், இப்படியும் சொல்வான் - உயிர் வாழ வேண்டியதுதானே முக்கியம்? நீ ஏன் ஒரு நாடகக்காரி ஆகக்கூடாது? முதலாளி புன்னைவனம் புதிதாக ஒருகலா மன்றம் தொடங்கப் போகிறாரே என்று நான் செத்திருக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள் எப்படி வாழமுடியும்?' என்று குமைந்தது <s\{@}GT Ê-SITETUD. கலகலப்பாகப் பேசி நின்றவள் திடீரென்று தன்னிலே தானாகி மோனநிலை அனுஷ்டித்து விட்டதைக் கண்ட தாமோதரன் அவளுக்காக அனுதாபம் கொண்டான். ஒரே நாளில் என்ன சாதித்துவிட முடியும்? அதிலும் நேற்று இரவிலே தான் இவள் தன் வரலாற்றுக் குறிப்பை இங்கே கொண்டு வந்து போட்டாள். ஒருநாள் ராத்திரியிலேயே அற்புதங்கள் மலர்ந்துவிடக் கூடிய காலமா இது என்று சிரித்தது அவன் மனம். அவன் வீட்டினுள் சென்று குமுதத்தின் குறிப்புகளை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். மெளனமாக அதை வாங்கிக் கொண்டு 'சரி, நான் போய்வருகிறேன்' என்று கூறி அவனைப் பார்த்தாள். உங்களுக்கு சிரமம் கொடுத்துவிட்டேன். மன்னிக்கணும்' என்று முனங்கினாள். 'எனக்கென்ன சிரமம் நான் பிரமாதமாக ஒன்றும் சாதித்து விடவில்லையே என்றான் அவன். அருள் கூர்ந்து எனது கிறுக்கல்களைப் படித்து முடித்துவிட்டு திரும்பத் தந்தது பெரிய சாதனைதானே என்று சொல்லி நகர்ந்தாள் குமுதம். 'உனது விலாசம்? அதைச் சொல்லவில்லையே! அந்தக் குறிப்பிலும் காணவில்லை. தேடிப்பார்த்தேன். விலாசம் தெரிந் திருந்தால் நேற்று இரவிலேயே வந்து சந்தித்து அனுதாபம் அறிவித்திருப்பேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/93&oldid=841462" இலிருந்து மீள்விக்கப்பட்டது