பக்கம்:செவ்வானம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செவ்வானம் 'நல்ல வேளை மகத்தான திட்டங்கள் வகுத்துக் கொடுக்க நினைத்தீர்களோ என்று பார்த்தேன்.உங்களிடம் அனுதாபங்களையும் பாராட்டுதல்களையும் தவிர வேறொன்றையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை என்று தெரிகிறது. சந்தோஷம் என்று சொல்லி நடந்தாள் அவள் - 'இவள் மன வானிலே திடீரென்று கார்மேகம் கவிந்துவிட்டது: அறிவொளியிலே கிரகணம் பற்றிக்கொண்டது காரணம் இல்லாமலே தான் ஒரு பெண்ணின் மனம் ஏன் மகிழ்வுறுகிறது. எதனால் பிணங்குகிறது. சீறுகிறது. சிணுங்குகிறது என்று எளிதில் கண்டு பிடித்துவிட முடியுமா என்ன? என எண்ணினான் தாமோதரன். அவளைத் தடுத்து நிறுத்தவோ, வியாக்கியானங்கள் கூறி தன் போக்கை விளக்கவோ விரும்பவில்லை அவன். தனது எண்ணங்களை அவளால் புரிந்து கொள்ள முடியாது என்ற நிச்சய நம்பிக்கை ஏற்பட்டிருந்தது அவனுக்கு என்னைப் புரிந்துகொள்ளும் சக்தி பெண்ணுக்கு எது? என்று சவாலிட்டது அவன் உள்ளம். செளக்கியமாகப் போய் வா அம்மா என்னைப் பற்றி ஏதாவது எழுதிவைக்கத் தோன்றாமலா போகும். தாராளமாக உனது அபிப்பிராயங்களை எழுது, அந்த விமர்சனத்தை என் பார்வைக்கு அனுப்பிவைக்க மறந்துவிடாதே என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய வேண்டுமென்ற ஆசை எனக்கு என்றுமே உண்டு. அந்தக் கருத்துக் கண்டு. நான் சீர்திருந்தி விடப்போவதில்லை. ஆனால் சிரிப்பதற்கு நிறைய விஷயம் கிடைக்கிறது என்றான். தாமோதரன் உணர்ச்சித்துடிப்பினால் தன்னையே மறந்து பேசத் தொடங்கியது வேண்டுமெனச் செய்தது அல்ல. அந்த மாற்றம் ஏற்பட்டு விட்டது என்ற பிரக்ஞையே அவனுக்கில்லை. ஆனால் அது அவள் மனதில் தைத்தது. தன்னை அவமதிக்கிறான் அவன் என்ற ஆத்திரம் எழுந்தது. காரணமின்றி அழுகை பொங்கி வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு திரும்பிப் பாராமலே நடந்தாள். இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/94&oldid=841463" இலிருந்து மீள்விக்கப்பட்டது