பக்கம்:செவ்வானம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செவ்வாணம் உள்ளாக்கலாம் என்ற கவலை ஏற்பட்டது அவருக்கு என்றாலும் தீர்க்க முடியாத பெரும் பிரச்னையாகத்திகழவில்லை அது. சுயநலம் என்பதே அவரது வாழ்க்கைப் படகுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மிளிர்ந்ததனால், இச்சமயத்திலும் சாவித்திரியைத்தான் முதலில் கவனிக்க வேண்டும் என்று நிச்சயமாகத் தீர்மானித்தார் சிவசைலம். ஆகையினாலே அற்புதமாக அலங்காரங்கள் செய்து கொண்டு சாவித்திரியின் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார் அவர். அவர் போன வேளையிலே சாவித்திரி மட்டும்தானிருந்தாள். மற்றவர்கள் எங்கோ யாரையோ பார்க்கப்போயிருப்பதாக அறிவித்தாள். சந்தர்ப்பமும் நமக்கு சகாயம் செய்கிறது என்று மகிழ்வுற்றார் சுயநலப்புலி, சாவித்திரி தளுக்குப் பண்ணி அவரை மயக்கத் தவறவில்லை. 'அவள் ஒரு இடத்தில் உட்காராமல், நிலையாக நின்று விடாமல் அங்குமிங்கும் அலைந்து, அழகுநடைகள் பல காட்டி, வசிய நிலைகள் பல சித்திரித்து தனிநாட்டியம் பயின்றாள் அவள் லட்சியம் அவளுக்கு முக்கியம்தானே! முதலாளி எப்போ கம்பெனி ஆரம்பிக்கப் போறாங்க?' என்று விசாரித்தாள் அவள்.'நாடகங்களிலே நடிக்க முக்கியமான பார்ட் எனக்குத் தரும்படி செய்வீர்களா? என்று குழைந்தாள். 'உம் என்னவோ சந்தேகம்தான் என இழுத்தார் சிவசைலம். 'ஏன்? வேறு யாரையாவது நியமித்தாச்சா?" 'இன்னும் இல்லை. ஆனால் அதிர்ஷ்டச்சீட்டு சியாமளா வுக்குத்தான் விழும் போலிருக்கு என்று அவள் பக்கம் கள்ளப் பார்வையை ஏவியவாறு அலட்சியமாகச் சொல்லுதிர்த்தார் அவர். 'சியாமளாவுக்கா? அவளுக்கென்ன தெரியும் என்று பதட்டமாக அறிவித்தாள் சாவித்திரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/96&oldid=841465" இலிருந்து மீள்விக்கப்பட்டது