பக்கம்:சேக்கிழார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. குன்றத்தூர்

புலியூர்க் கோட்டம்

தொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது என்பது முன் சொல்லப்பட்டது அல்லவா? அவற்றில் ஒன்று புலியூர்க் கோட்டம்[குறிப்பு 1] என்பது. இதன் தலைநகரம் புலியூர் என்பது. புலியூர், சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அதுவே புலியூர்க் கோட்டத்தின் தலைநகரம். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி, கோவூர், குன்றத்தூர் முதலியன இக்கோட்டத்தைச் சேர்ந்தவை.

குன்றத்தூர்

இது பல்லாவரம் (பல்லவபுரம்) என்னும் புகை வண்டி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில்


  1. சோழர் ஆட்சி காலம் கி.பி. 900-1300.
    மற்ற இருபத்து மூன்று கோட்டங்களின் பெயர்கள் இவை : 1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4 செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்துார்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 20. குன்றவட்டானக் கோட்டம் 13 பல்குன்றக்கோட்டம் கோட்டம் 14. இளங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17 படுவூர்க் கோட்டம், 18. கடிகர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேர்த்துார்க்கோட்டம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/15&oldid=492400" இலிருந்து மீள்விக்கப்பட்டது