பக்கம்:சேக்கிழார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18சேக்கிழார்


தூரில் வைத்தியம் செய்து வந்தார். அந்த வைத்தியர் ஆசிரியராகவும் இருந்தார். அவரிடம் பலர் கல்வி பயின்றனர்.

குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் சைவத்திலும் வைணவத்திலும் பக்தி மிகுந்தவர்கள். அவர் கள் சேக்கிழார் கட்டிய சிவன் கோவிலுக்குப் பல தான தருமங்கள் செய்தனர்; பெருமாள் கோவிலையும் கவனித்து வந்தனர்.


3. சேக்கிழார் பிறப்பு

தொண்டை மண்டல வேளாளர்

சேக்கிழார் வேளாளர் மரபினர். குன்றத்துனர் முதலிய தொண்டை நாட்டு ஊர்களில் இருந்த வேளாளர் தொண்டை மண்டல வேளாளர்: எனப்பட்டனர். அவர்கள் கரிகாலனால் தொண்டை நாட்டிற் குடியேற்றப் பட்டவர்கள். அவர்கள் தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களில் தங்கி வாழ்ந்தார்கள்; காடுகளை அழித்து விளை நிலங்களாகத் திருத்தினார்கள்; ஏறக்குறையக் கரிகாலன் காலம் முதல் சேக்கிழார் காலம் வரை தொண்டை நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

குடிப் பெயர்கள்

‘கிழார்’ என்பது வேளாளர்க்கு வழங்கிய பொதுப் பெயர். தொண்டை மண்டல வேளாளருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/20&oldid=492406" இலிருந்து மீள்விக்கப்பட்டது