பக்கம்:சேக்கிழார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 19


பல குடிகள் இருந்தன. அக்குடிப் பெயர்கள் அவர்கள் குடியேறிய ஊர்களைக் கொண்டும் வழிபட்ட கடவுளர் பெயர்களைக் கொண்டும் பிறவற்றைக் கொண்டும் அமைந்திருந்தன. குளப்பாக்கம் என்ற ஊரிற் குடியேறிய முதல் வேளாள மரபினர் 'குளப்பாக்கக் கிழார் மரபினர்’ என்று பெயர் பெற்றனர். கூடலூர் என்ற ஊரில் குடியேறிய முதல் வேளாள மரபினர் 'கூடல் கிழார்க் குடியினர்' எனப்பட்டனர். இவ்வாறு இடம் பற்றி வந்த குடிப் பெயர்கள் பல.

சேக்கிழார் குடி

ஆனால், சேக்கிழார் குடி இடம் பற்றி வந்தது அன்று. அஃது இரண்டு வகை பற்றி வந்திருக்கலாம். (1) சே - எருது; கிழான் - உரிமை உடையவன்; அஃதாவது எருதினை உரிமையாகக் கொண்டவன் (சிவன்) என்று சிவ பெருமானுக்குப் பெயராகும். அப்பெயரைக் கொண்ட வேளாள முதல்வன் சந்ததியார் ‘சேக்கிழார் குடியினர்’ என்று அழைக்கப் பட்டிருக்கலாம். (2) சேக்கிழான் என்பது எருதினைப் பயிர்த் தொழிலுக்கு உரிமையாகக் கொண்ட வேளாளன் என்றும் பொருள் படும். ஆனால் இப் பொருளை விட முன் சொன்ன பொருளே பொருத்தம் உடையது.

சேக்கிழார் குடியினர்

சேக்கிழார் குடியினர் பொதுவாகத் தொண்டை நாடு முழுவதிலும் பரவி இருந்தனர். வேளாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/21&oldid=492407" இலிருந்து மீள்விக்கப்பட்டது