பக்கம்:சேக்கிழார்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20சேக்கிழார்


தமிழ் நாட்டில் அரசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள்; பழைய சேர - சோழ - பாண்டியருக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்து வந்த குடியினர். ஆதலால் அவர்கள் நீண்ட காலமாக நாட்டு அரசியலில் பங்கு கொண்டு இருந்தனர்; அவர்கள் கல்வி கேள்விகளிலும் அரசியல் காரியங்களிலும் வழி வழியாகவே சிறந்திருந்தனர்.

இங்ஙனம் சிறந்த வேளாளருட் சேக்கிழார் குடியினர் முதல் வரிசையில் இருந்தனர். அவர்கள் பல்லவர்க்குப் பின் வந்த சோழர் ஆட்சியில் உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றுச் சிறந்த நிலையில் வாழ்ந்தனர். நமது சேக்கிழார்க்கு முன்னரே அக்குடியினர் பலர் மாநிலத் தலைவர்களாகவும் பெரிய அரசியல் உத்தியோகஸ்தர்களாகவும் இருந்தார்கள் என்பது,

1. மணலிற் கோட்டத்து மேலப்பழுவூர் - சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சங்கர நாராயணன்

2. மேலுார்க் கோட்டத்துக் காவனூர் - சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சத்தி மலையன்

3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்துரர்ச் சேக்கிழான் ஆடவல்லான்

என வரும் கல்வெட்டுக்குறிப்புகளால் அறியலாம்.

‘சோழ முத்தரையன்’ என்பது சோழ அரசாங்க அதிகாரிகட்கு வழங்கப்பட்ட பட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/22&oldid=492392" இலிருந்து மீள்விக்கப்பட்டது