பக்கம்:சேக்கிழார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 23

யும், கீழ் ஒரு மெல்லிய மரப் lഖങ്ങക്കു அட்டை களைப் போல வைக்கப்பட்டுக் கட்டப்படும். இவ்வாறு கட்டப்பட்டது ஒரு புத்தகமாகும்.

ஒவ்வொரு மாணவரும் இவ்வாறு தாம் படிக்க விரும்பும் நூல்களைப் பனை ஒலைகளில் எழுதித் தான் படிக்க வேண்டும். இஃது எவ்வளவு கடினமான வேலை, பாருங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு நூல்களைத் தயார் செய்து கொள்ள வேண்டி இருந்ததால், பலர் அக்காலத்தில் படித்தவர்களாக இருந்திருத்தல் முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மை அப்படி அன்று. அக்காலத்தில் பலர் கல்வி கற்றிருந்தனர். .

அக்காலப் பள்ளிக் கூடங்கள்

அக்காலத்தில் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரது வீட்டுத் திண்ணையே பள்ளி. அங்குக் கிராமத்துப் பிள்ளைகள் காலையிலும் மாலையிலும் கூடுவார்கள். ஆசிரியர் முதலில் மணல் மீது எழுத்துகளை எழுதிக் கற்பிப்பார்; பிறகு சொற்களைப் போதிப்பார்; பின்னர் மனப்பாடம் செய்யத் தக்க சிறிய நீதி நூல்களைக் கற்பிப்பார், சொற்களுக்குப் பல பொருள் கூறும் அகராதிகள் மனப்பாடம் செய்யப்படும். இதுவே பழைய காலத்தில் போற்றப்பட்ட கல்வித் திட்டமாகும். தமிழ் மொழியில் உள்ள சொற்கள் - அவற்றின் பொருள் இவ்விரண்டையும் மனப்பாடம் செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/25&oldid=492395" இலிருந்து மீள்விக்கப்பட்டது