பக்கம்:சேக்கிழார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28சேக்கிழார்


சேக்கிழார் பல நூல்களையும் நன்றாகப் படித்து வந்தார். அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாயன்மார் வரலாறுகளை ஒரு நூலாகப் பாட வேண்டும் என்று எண்ணினார். அந்தச் சிறுவயதில் தோன்றிய எண்ணமே அவரை இறுதியாகப் பெரிய புராணம் பாடச் செய்தது.


5. அக்காலச் சைவ சமய நிலை

அநபாயன் முன்னோர்

சேக்கிழார் காலத்துச் சோழ அரசன் அநபாய சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கன். அவன், பல்லவர்க்குப் பின் வந்து, தென் இந்தியா முழுவதையும் பிடித்தாண்ட சோழப் பேரரசர் வழி வந்தவன். பெயர் பெற்ற சோழ வீரர்களான இராஜராஜன், இராஜேந்திரன் என்பவர் அவன் முன்னோர் ஆவர்.

இராஜராஜன்

இராஜராஜன் சிறந்த போர் வீரன். அவன் சேர, பாண்டிய நாடுகளை வென்றவன்; இலங்கைத் தீவைக் கைப்பற்றியவன்; குடகு, முதலிய மேல் கடற்கரை நாடுகளையும் மைசூர்ப் பிரதேசத்தையும் தெலுங்கு நாட்டையும் கைக் கொண்டவன். அவனே தென் இந்தியா முழுவதையும் சோழர் ஆட்சிக்குக் கொண்டு வந்த முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/30&oldid=492389" இலிருந்து மீள்விக்கப்பட்டது