பக்கம்:சேக்கிழார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30சேக்கிழார்


மேற் பார்க்கவும் தேவாரத்தை நாடெங்கும் பரப்பவும் ஓர் அரசாங்க அதிகாரியை நியமித்தவன். அந்த அதிகாரிக்குத் தேவார நாயகம் என்பது பெயர். இராஜேந்திரன் பெரும் புலவன் ; புலவர் பலரை ஆதரித்தவன் ; பண்டித சோழன் என்ற பெயர் பெற்றவன்.

சமயத் திருப்பணிகள்

பல்லவர்க்குப் பின் நமது அநபாயன் காலம் வரை இருந்த சோழ அரசரும் அரச மாதேவியரும் சைவ மதத்தை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். அவர்கள் தேவார ஆசாரியர்கள் பாடிய திருக்கோவில்களைக் கருங்கற் களால் புதுப்பித்தனர்; அவற்றில் பூசை-விழா முதலியன குறைவில்லாமல் நடைபெறப் பல கிராமங்களை மானியமாக விட்டனர்; ஒவ்வொரு கோவில் மூர்த்தங்களுக்கும் ஆடை ஆபரணங்கள் அளித்தனர்; திருக் குளங்களைப் பழுது பார்த்தனர். ஒவ்வொரு பழைய கோவிலிலும் புதிய கோவிலிலும் தேவாரப் பாடல்களைப் பாட ஒதுவார்களை நியமித்தனர்.

மடங்கள்

பல ஊர்களில் கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன. அவற்றில் பலவகைச் சிவனடியார் தங்கி இருந்தனர். அவர்கள் கோவில்களைக் கண்காணித்து வந்தனர்; ஊரார்க்குச் சைவ சமய நூல்களைப் போதித்து வந்தனர் ; குளம், நந்தவனம், கோவில் இவற்றைத் தூய்மையாக வைத்திருந்தனர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/32&oldid=492391" இலிருந்து மீள்விக்கப்பட்டது