பக்கம்:சேக்கிழார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 31


பூசைக்கு வேண் டிய மலர்களைப் பறித்து மாலைகள் தொடுத்தனர்; அருட் பாடல்களைப் பாடினர்; வெளியூரில் இருந்து வரும் அடியார்களை உபசரித்து அன்னம் இட்டனர். மக்களுக்கு இலவச வைத்தியம் செய்தனர். இப் பெருமக்கள் தொண்டுகள் பொது மக்களை நல்வழிப் படுத்தின. மன அமைதியையும் பக்தியையும் ஊட்டின.

நாயன்மார் உருவச் சிலைகள்

சோழ அரசர்கள் செய்த திருப்பணிகளால் நாட்டில் சைவம் வளரத் தொடங்கியது. சிவனடியார்கள் செய்த போதனையினால் மக்கள் அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறுகளையும் அறியலானார்கள்; அவர்களுள் மிகச் சிறந்த தேவார ஆசிரியர் மூவர் திருவுருவங்களையும் தத்தம் ஊர்க் கோவில்களில் வைத்துப் பூசிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாயனார் உருவமும் அவர் பிறந்த ஊர்க் கோவிலில் வைத்து வழிபடப் பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலில் திருநாவுக் கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், சிறுத்தொண்டர், சண்டீசர் முதலியவர் உருவச் சிலைகள் வைக்கப் பட்டன. அவற்றுக்கு நாள் தோறும் பூசைகள் நடை பெற்றன. திருவாரூர்க் கோவிலில் தேவார ஆசிரியர் மூவர் சிலைகளும் வைத்துப் பூசிக்கப்பட்டன.

இவ்வாறு நாடு முழுவதும் நாயன்மார்க்குக் கருங்கற் சிலைகளும் செப்புச் சிலைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/33&oldid=492376" இலிருந்து மீள்விக்கப்பட்டது