பக்கம்:சேக்கிழார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32சேக்கிழார்


உண்டாக்கப் பட்டன; மக்களால் பயபக்தியுடன் வழிபடப் பட்டன; திருவிழாக்கள் நடைபெற்றன. பிரசங்கங்கள் மூலமாக அவர்கள் வரலாறுகள் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கப்பட்டன.

சித்திரங்கள்

சோழர்கள் கட்டிய பல கற்கோவில் சுவர்களில் நாயன்மார் வரலாறுகள் செதுக்கப்பட்டு இருந்தன. அச் சிற்பங்கள் பிராகாரம் சுற்றுவார் கண்ணையும் கருத்தையும் இழுத்தன. சில கோவில்களில் நாயன்மார் வரலாறுகளில் முக்கியமான பாகங்கள் சித்திர வடிவில் காட்டப்பட்டு இருந்தன. தஞ்சைப் பெரிய கோவிலில் இன்னும் அச் சித்திரங்களைக் காணலாம்; சுந்தரர் திருமணத்தைச் சிவபிரான் கிழவர் வடிவில் சென்று தடுத்தல், சுந்தரர் வெள்ளை யானை மீது திருக்கயிலை செல்லுதல், சேரமான் குதிரை மீது ஏறிச் சுந்தரரைப் பின் பற்றிப் போதல், சிவபெருமான் யோக நிலையில் இருத்தல், முதலிய காட்சிகள் சித்திர ரூபமாகக் காட்டப் பட்டுள்ளன.

இவ்வாறு நாயன்மார் வரலாறுகள் சிற்பங்கள் மூலமாக விளக்கப்பட்டு இருந்தன; சித்திரங்கள் மூலமாக விளக்கப்பட்டன; திருவிழாக்கள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டன; பிரசார மூலமாகவும் பொது மக்கள் நாயன்மார் வரலாறுகளை அறிந்திருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/34&oldid=492377" இலிருந்து மீள்விக்கப்பட்டது