பக்கம்:சேக்கிழார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 35

உயர்ந்த நவரத்தினங்கள் அங்கங்குப் பதிக்கப் பட்டன. விக்கிரம சோழன் தன் பெயரால் (விக் கிரம சோழன் திருவீதி) திருவீதி ஒன்றை அமைத் தான். அதனில் பெரிய மாளிகைகளை எடுப்பித் தான். இவ்வாறு இவன் தில்லையில் செய்த திருப்பணிகள் பலவாகும்.

ஒட்டக் கூத்தர்

இவர் பெரிய தமிழ்ப் புலவர். இவர் விக்கிரம சோழன் மீது உலா ஒற்றைப் பாடியுள்ளார். விக்கிரம சோழன் மகனான அநபாயன் இவரிடமே கல்வி கற்றான். ஒட்டக்கூத்தர் அநபாயன் மீதும் ஒர் உலாப் பாடியுள்ளார். அவர் அநபாயன் மகனான இரண்டாம் இராஜராஜனுக்கும் ஆசிரியர் ஆவர். அவன் அரசனாக இருந்த பொழுது அவன் மீதும் உலாப் பாடியுள்ளார். இவை மூன்றும் மூவர் உலா எனப் பெயர் பெறும். அவர் தக்கயாகப் பரணி முதலிய பல நூல்களைப் பாடிய பெரும் புல்வர். அதனால் அவரிடம் கல்வி கற்ற அநபாயன் சிறந்த தமிழ்ப் புலவனாக விளங்கினான். இதனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/37&oldid=492381" இலிருந்து மீள்விக்கப்பட்டது