பக்கம்:சேக்கிழார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36சேக்கிழார்


“ஆடும் கடை மணி ந்ாவசையாமல் அகிலமெல்லாம்:
நீடும் குடையில் தரித்த பிசானென்று நித்தநவம்
பாடும் பெருமான் கவி ஒட்டக்கூத்தன் பாதமயத்தைச்
சூடும் குலோத்துங்க சோழனென்றே என்னைச் செப்புவரே”

என்று அநபாயனே பாடிய பாட்டினால் அறியலாம்.

அநபாயன்

அநபாயன் என்பது அவனது சிறப்புப் பெயர். இரண்டாம் குலோத்துங்கன் என்பது அவனது அபிஷேக நாமம். அவனைச் சேக்கிழார் தம் புராணத்தில் பத்து இடங்களில் "அநபாயன்" என்றே சுட்டியுள்ளார். அவனுடைய காலத்தில் செய்யப்பட்ட தண்டி அலங்காரம் என்னும் நூலிலும் அவன் ‘அநபாயன்’ என்றே குறிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/38&oldid=492382" இலிருந்து மீள்விக்கப்பட்டது