பக்கம்:சேக்கிழார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40சேக்கிழார்


என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டு இருக் கின்றன. நீங்கள் அவற்றுக்கு விடை கூற விரும்புகிறேன். உங்களால் முடியவில்லை ஆயின், உங்கள் ஊர்களில் உள்ள பிற புலவர்களைக் கொண்டேனும் விடைகளை விசாரித்து, அனுப்புங்கள்,” என்றான்.

அரசன் இவ்வளவு அடிப்படை போட்டுப் பேசியது கேட்ட புலவர். பயந்தனர் ; அவன் என்ன கேள்விகளை வெளியிடுவானோ என்று எண்ணினர்; அவற்றுக்கு ஏற்ற விடை கூறாவிடில் அவன் தங்களை இழிவாக எண்ணுவானோ என்று அஞ்சினர். ‘இவன் வெளியிடும் கேள்விகளைக் கேட்போம்’, என்று அவனை நோக்கினர்.

புலவர்களின் மனத் தடுமாற்றத்தை அவர்கள் முகக் குறிகளால் உணர்ந்த வேந்தன் புன்னகை காட்டி, “புலவர்களே, அம் மூன்று கேள்விகள் இவை,” என்று கூறினான். அவை கீழ் வருவன :

1. மலையிற் பெரியது எது?

2. கடலிற் பெரியது எது?

3. உலகிற் பெரியது எது?

புலவர் கலக்கம்

இக் கேள்விகள் தமிழ் நூல்களைப் பற்றியவை என்பதைப் புலவர்கள் எண்ணவில்லை. இவை தம்மைத் திடுக்கிடச் செய்ய அரசன் கேட்ட கேள்விகள் என அவர்கள் எண்ணினார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/42&oldid=491954" இலிருந்து மீள்விக்கப்பட்டது