பக்கம்:சேக்கிழார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 41


"மலையிற் பெரியது எது? கடலை விடப் பெரியது எது? உலகத்தை விடப் பெரியது எது? இக் கேள்விகட்கு யாரே பதில் சொல்ல முடியும்: முடியாது! முடியாது!” என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.

சேக்கிழார் விடை

அநபாயன் கேள்விகள் தொண்டை நாட்டிற் பரவின. தொண்டை நாட்டுப் புலவர்கள் யோசித்து விடை காண முயன்ற்னர்; முடியவில்லை. இக்கேள்விகளை ஒர் உத்தியோகஸ்தன் மூலமாகச் சேக்கிழார் கேள்விப்பட்டார்; நகைத்தார். "திருக்குறளைப் படித்துப் பாக்களை நினைவிற் கொண்டவரே இவற்றுக்கு விடை கூற வல்லவா!' என்று தமக்குள் கூறிக் கொண்டார். பின்னர் அவர் ஒவ்வொரு கேள்வியையும் எழுதி, அதன் கீழ், அதற்குரிய பதிலையும் எழுதித் தக்கவ்ர் மூலமாக அரசனுக்கு அனுப்பினார். அக்கேள்விகளும் விடைகளும் பின் வருவனவாகும் :-

1. மலையிற் பெரியது எது?

விடை : நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.
2. கடலிற் பெரியது எது?

விடை : பயன் தூக்கார் செய்தஉதவி நயன்துக்கின்

நன்மை கடலிற் பெரிது.
3. உலகிற் பெரியது எது?

விடை : காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/43&oldid=491955" இலிருந்து மீள்விக்கப்பட்டது