பக்கம்:சேக்கிழார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42சேக்கிழார்


இம்முன்றின் பொருள்

1. தனக்கு உரிய வாழ்க்கையில் இருந்து கொண்டு, அடக்கமும் ஒழுக்கமும் உடையவனது உயர்ச்சி மலை உயர்ச்சியை விடப் பெரியதாகும்.

2. ஒரு பயனையும் கருதாமல் செய்யப்படும் உதவியினது சிறப்பு, யோசிக்கும் பொழுது, கடலினும் பெரியதாகும்.

3. தக்க காலத்தில் செய்யப்படும் உதவி, மிகச் சிறியதாக இருந்தாலும், அது செய்யப்படும் சந்தர்ப்பத்தை நோக்க, உலகத்தை விடப் பெரியதாகும்.

அநபாயன் மகிழ்ச்சி

அரசன் இந்த மூன்று விடைகளையும் படித் தான். அவன் சிறந்த புலவன் அல்லவா? அதனால் சேக்கிழாரது. நுண்ணறிவினை வியந்தான் ; உடனே அவரைப் பார்த்து அளவளாவ ஆவல் கொண்டான். “உடனே வந்தருள்க!” என்று தொண்டை நாட்டுப் புலவர்க்கு ஒலை போக்கினான்.

சேக்கிழார் வருகை

அரசர் பெருமானது ஒலையைக் கண்ட சேக்கிழார் மகிழ்ந்தார். அவர் அநபாயனுடைய தமிழ்ப் புலமையையும் அழுத்தமான சைவப் பற்றையும் கேள்விப் பட்டிருந்தார்; தமக்கு ஏற்ற மனப்பான்மையை உடைய அவனைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ந்தார். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/44&oldid=491956" இலிருந்து மீள்விக்கப்பட்டது