பக்கம்:சேக்கிழார்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 43


ஆதரவைப் பெற்றுச் சைவத்தையும் தமிழையும் வளர்க்க எண்ணினார்; அதனால் அப் பெருமானைக் காணப் புறப்பட்டார்.

அக்காலத்தில் மாட்டு வண்டிகளே மலிந்திருந்தன. அதனால் சேக்கிழார் பல நாள் பிரயாணம் செய்ய வேண்டியவர் ஆனார்; வழி நெடுக இருந்த ஊர்களில் தங்கினார்; ஆங்காங்கு இருந்த சிவன் கோவில்களில் நுழைந்து தரிசித்தார்; அங்கு இருந்த உருவச் சிலைகளையும் கல் வெட்டுகளையும் கவனித்தார். இவ்வாறு அவர் பல நாள் பிரயாணம் செய்து, அரசன் தலை நகரமாகிய கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்தார்.

சேக்கிழார் - முதல் அமைச்சர்

அநபாயன் சேக்கிழாரது சைவப் பொலிவைக் கண்டான்; அவருடைய உடற்கட்டு, அழகியதோற்றம், திருநீற்று ஒளி, பரந்த பார்வை முதலியன அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. அரசன் அவரை வரவேற்று உபசரித்தான்; சிறிது நேரம் தமிழைப் பற்றியும் சைவ சமயம் பற்றியும் அவரிடம் பேசினான். தொண்டை நாட்டு அரசியல் சம்பந்தமான பல விஷயங்களைப் பற்றி அவரை விசாரித்தான்: முடிவில் அவர் அரசியல்-சமயம்-இலக்கியம் இவற்றில் சிறந்த அறிவுடையவர் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டான். அப்பொழுது அப் பெருமகன். அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவன் தனது பேரவையில் இருந்த எல்லோரையும் பார்த்து-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/45&oldid=491957" இலிருந்து மீள்விக்கப்பட்டது