பக்கம்:சேக்கிழார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 முகவுரை

தமிழ்ப் புலவர் வரலாறுகள் நல்ல ஆராயச்சி முறையைத் தழுவி வெளிவருதல் அருமையாக இருக்கிறது. ஆராய்ச்சிக் காலமாகிய இக்காலத்தில் வெளிவரும் நூல்கள் கல்வெட்டு-சரித்திரம்-இலக்கியம் இவற்றை அடிப் படையாகக் கொண்டு வெளிவருதலே நல்லது. இந்த முறையில் அமைந்திருப்பதே இச்சிறு நூல்.

சேக்கிழார் ஒரு வேளாளர்; தமிழ்ப் புல்வர்; அரசியல் அறிஞர்; கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் பேரரசானாக இருந்த இரண்டாம் குலோத்துங்கனின் முதல் அமைச்சர் ஆவர். அப் பெரியார் நாயன்மார் வரலாறுகளைப் பெருங் காவியமாகப் பாடின. பெரும் புலவர். அக் காவியமே பெரிய புராணம் என்பது.

சேக்கிழார் முதல் அமைச்சராக இருந்தமையால் ஸ்தல யாத்திரை செய்தார்; நாயன்மார் வரலாறுகள் பற்றிய மூலங்களைச் சேகரித்தார்; கல்வெட்டுகளை ஆராய்ந்தார்; கர்ண பரம்பரைச் செய்திகளை ஆராய்ந் தார்; இலக்கிய நூல்களைப் படித்தார்; இவை அனைத்தின் துணையைக் கொண்டும் அரிய காவியம்பாடினார்.

இச்சிறு நூலில் சேக்கிழார் வரலாறு அவர் அமைச்சராக இருந்தமை அழியாப் புகழ் பெற்ற பெரிய புராணம் பாடினமை என்பன எளிய நடையில் இள மாணவரை உளங்கொண்டு குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தமிழ்ப் புலவர் வரலாறும் இவ்வாறு தனித்தனி நூலாக வருதல் தமிழ் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். திருவருள் துணை கூட்டுமாக ! .


சேக்கிழார் அகம்,
சென்னை.

மா. இராசமாணிக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/5&oldid=491982" இலிருந்து மீள்விக்கப்பட்டது