பக்கம்:சேக்கிழார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 53


களில் புலவர்களுடன் பொழுது போக்குதல் வழக்கம். அநபாயன் முன்னிலையில் புலவர்கள் ஒரு தமிழ் நூலை எடுத்து முறையாகப் படித்து வருவார்கள்; அரசனுக்கு ஐயம் உண்டாகும் இடங்களை விளக்குவார்கள். அரசன் இவ்வாறு தன் காலத்திற்கு முற்பட்ட தமிழ் நூல்களைப் புலவர் படிக்கக் கேட்டு வந்தான். பெருமக்கள் பலரும் உடன் இருந்து கேட்பது வழக்கம்.

ஜீவக சிந்தாமணி

இவ்வாறு அநபாயன் கேட்டு வந்த நூல்களுள் சீவக சிந்தாமணி என்பது ஒன்று. அது சமண சமய காவியம். அது வட இந்தியாவில் வாழ்ந்த சீவகன் என்ற ஒர் அரசன் வரலாறு. அது வட வடமொழியில் செய்யப் பட்டிருந்தது. அதனைத் திருத்தக்க தேவர் என்பவர் ஒரு காவியமாகத் தமிழில் பாடினார். அத் தமிழ் நூல் அநபாயனுக்கு ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முற்பட்டது. அந்நூல் நல்ல தமிழ்ப் பாடல்களால் இயன்றது; படிக்கப் படிக்கச் சுவை தருவது. அதனால் புலவர் நாள்தோறும் படித்து வர, அநபாயன் இன்பமாகக் கேட்டு வந்தான்.

சீவகன் வரலாறு

சீவகன் பிறப்பு

வட இந்தியாவில் ஏமாங்கத நாடு என்பது ஒன்று. அதனைச் சச்சந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் வேறோர் அரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/55&oldid=491989" இலிருந்து மீள்விக்கப்பட்டது