பக்கம்:சேக்கிழார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70சேக்கிழார்


தான். அரண்மனையை அடைந்ததும் அவருக்குத் "தொண்டர் சீர் பரவுவார்" என்ற பட்டத்தையும் விலை மதிப்பற்ற ஆடை அணிகளையும் தந்தான். பல சிற்றுார்களை வழங்கினான்.

பாலறாடிாயர்க்குப் பதவி

அரசன் அவரை நோக்கி, "சைவப் பெரியீர், சைவ உலகம் செய்த நற்பேற்றின் பயனாக வந்த புலவர் மணியே, தாங்கள் இன்று முதல் தவ முனிவராக இருக்க வேண்டுபவர் ஆயினீர். இனி உம்மை அமைச்சராக வைத்திருப்பது பாபம். யான் தங்களிடத்தில் வேலை வாங்குதல் தவறு. தங்கள் மரபு அரசாங்கத்தில் பெயர் பெற வேண்டும்; ஆதலால் தங்கள் அருமைத் தம்பியார் பாலறாவாயர் தொண்டை மண்டலத்தைக் காத்து வரும் மாகாணத் தலைவராக இருக்கக் கடவர். தாங்கள் சிவ ஸ்தல யாத்திரை செய்து கொண்டு, சைவ சமய வளர்ச்சிக்கும் தங்கள் ஆன்ம அமைதிக்கும் உரிய செயல்களில் ஈடுபடலாம்!” என்று அன்பும் பணிவும் தோன்றக் கூறினான்.

சேக்கிழார் தல யாத்திரை

சேக்கிழார் பெருமான் அரசன் விருப்பப்படி அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். நாயன்மார் பாடல் பெற்ற ஸ்தலங்கட்கு யாத்திரை சென்றார். அங்கங்குப் பல திருப்பணிகள் செய்தார். தமது பிறந்த இடமாகிய குன்றத்துரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/72&oldid=492354" இலிருந்து மீள்விக்கப்பட்டது