பக்கம்:சேக்கிழார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 71


தங்கித் திருநாகேசுவரப் பெருமானைப் பணிந்து தவம், கிடந்தார்.

சேக்கிழார் சிறப்பு

சேக்கிழாரது திருத்தொண்டர் புராணம் இல்லாவிடில் நாயன்மார் வரலாறுகளை நாம் விளக்கமாக அறிய முடியாது; நாயன்மார் காலத்துச் சைவ சமய நிலைமையை நாம் அறிய வழியில்லை. அந்தக் காலத்தில் இந்த நாட்டில் இருந்த பெளத்த சமயத்தைப் பற்றியும் சமண சமயத்தைப் பற்றியும் தெளிவாக அறிய முடியாது. அக்கால உள்நாட்டு-வெளி நாட்டு வாணிகம்-நாட்டு நடப்பு-பலவகைப்பட்ட மக்களுடைய பழக்கவழக்கங்கள், பலவகைப்பட்ட நில வகைகள் முதலிய விவரங்களை உள்ளவாறு உணர முடியாது.

திருத்தொண்டர் புராணத்தில் கூறப்படும் நாயன்மார் காலம், நீங்கள் வரலாற்றில் படிக்கும் பல்லவர் காலம் ஆகும்.[குறிப்பு 1] அந்தக் காலத்துத் தமிழ் நாட்டுச் சைவ-பெளத்த-சமண சமயங்களின் நிலைமையைத் திருத்தொண்டர் புராணத்தைத் தவிர வேறு தமிழ் நூலில் விரிவாகக் காண இயலாது. அக்காலத் தமிழ் அரசர்களைப் பற்றிய ப்ல விவரங்களை இக் காவியத்திற் காணலாம், பல்லவர்-சாளுக்கியர் போர், பல்லவர்-தமிழ் அரசர் போர், பாண்டியர்-சாளுக்கியர் போர், அக்காலத்தில் உண்டான பெரும் பஞ்சங்கள் முதலிய


  1. கி. பி. 300-900.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/73&oldid=492353" இலிருந்து மீள்விக்கப்பட்டது