பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாயிரம் என்றும் கூறுவர். இவர்கள் கொடைத் திறம்வல்ல கோமகளுராகவும் திகழ்ந்தவர். புலவர்கட்கு நல்ல முறையில் பொருளை வழங்கி அவர்களே மகிழச் செய்தவர். இதனைத் திரு பிள்ளை அவர்களே, உன்பத கமல மலரைநாய் அடியேன் உளம்எனும் குளத்திடை ஊறும் அன்புநீர் பெருகி இருந்ததால் அதனுள் அலர்ந்திடத் திருவருள் புரிவாய் மன்பதை உலகில் தரித்திர நோயில் வருந்திடா திருநிதி அமுதம் துன்புரு தளிக்கும் துறைசைவாழ் பரனே சுப்பிர மணியசற் குருவே என்று பாடிப் பரவசமுற்றிருப்பதைக் காண்க. இப்பரமாசரி யர், தமக்கே அன்றி யாவர்க்கும் அரும்பெரும் துணையாய் அமைந்தவர் என்பதையும் பிள்ளை அவர்கள், செல்லர்க்கும் பெருமுழக்கம் மணமுழக்கம் எனமேல்போய்த் திகழ்மா டத்தால் சொல்ஆர்க்கும் கழனிகளில் தொலையாத வளம்காட்டும் துறைசை மேவிக் கல்லார்க்கும் நல்லார்க்கும் வல்லார்க்கும் அல்லார்க்கும் கணக்கி லாமற் றெல்லார்க்கும் எய்ப்பில்வைப்பாம் சுப்பிரமண் னியகுரவன் இருதாள் போற்றி என்றும் போற்றி யுள்ளனர். இத்தகைய குருமூர்த்தியின் பத்தொன்பதாவது முன் தோன்றல் உமாபதி சிவ்ம் ஆவார். இடையே உள்ள பதினேழு திருவாவடுதுறை ஆதீனகுரு மகாசந்நிதானங்கள். 1. பூர் பஞ்சாக்கர தே சி க ர். 2. பூரீ மறைஞான தேகிகர். 3. பூரீ அம்பலவாண தேசிகர். 4. பூரீ உருத்திரகோடி தேசிகர். 5 பூர் வேலப்ப தேசிகர்