பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 11ாயிரம் சிறப்பாக நடந்து வருகிறது. இக்குன்றுகள் பழம்பெருங் குன்றுகள் என்ற காரணத்தால் அரசாங்கத்தாரைச் சார்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சில இடங்களே அகழ்ந்து பல பழம்பொருள்களைக் கண்டெடுத்துச் சென்னைப் பொருட் காட்சிச் சாலையில், இவை குன்றத்துளரில் எடுக்கப் பட் டவை” என்ற குறிப்புடன் வைத்துள்ளனர். சேக்கிழார் பெருமான் பிறந்த இல்லம் இதுபோது திருக்கோயிலாகத் திகழ்கிறது. இங்கும் சேக்கிழார் திரு நட்சத்திரத்தின்போது பத்துநாள் விழா சிறப்பாக நடந்து வருகிறது. இங்குச் சேக்கிழார் மரபினரும், ஏனைய வேளாள மரபினரும் வாழ் ந் து வருகின்றனர். சைவ வைணவக் கோவில்கள் பழுதுபட்ட நிலையில் உள்ளன. இங்குக் கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குச் சேக்கிழார் பெய ரால் ஒரு திருமடம் உளது. சேக்கிழார் திரு நட்சத்திரத்தில் திருப்பனந்தாள் அதிபர் பூரீலது அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் மகேஸ்வர பூஜையை மிகச் சிறப்பாக நடக்க ஏற் பாடு செய்துள்ளனர். அன்று காலேமுதல் மாலைவரை சிறந்த முறையில் அன்னம் பாலிப்பினே அவர்கள் நடத்தி வருகின் றனர். இங்குச் செம்பரம்பாக்கம் ஏரிப் பாய்ச்சல் காரணமாகப் பயிர்கள் செழித்து வளர்கின்றன. இயற்கைக் காட்சி எழி லுடன் விளங்குகின்றது. ஒரு சிற்ருேடையும் இவ்வூர் வழியே செல்கிறது. இந்தக் குருவணக்கச் செய்யுள், சிலேடை அணியினைக் கொண்டது. சேக்கிழார் முருகப்பெருமாளுகவும், விநாயகப் பெருமானகவும், சிவ பெருமானுகவும் திகழ்கிருர் என்பதைச் சொற் சித்திரங்களில் வைத்துப் பிள்ளை அவர்கள் பாடியுள் өтrrff. சேக்கிழார் வேளாள மரபினர். ஆகவே, அவர் ஏர் வளம் உடையவர். மேலும், அவர் பெருமையில் மேல் ஆகி இருப் பவர். இவற்றைச் சிடையில் ஏர்வளம் என்பதை அழகு வளம் கொண்டு என்றும், பெரும் மையில்மேல் ஆகி என்னும் பொருளிலுல் சேக்கிழாரை முருகனுகவும் காட்டினர்.