பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 3f. தில்லைவாழ் அத்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனுர்க்கும் அடியேன் இல்லையே என்னத இயற்பகைக்கும் அடியேன் இளையன்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெவ்லுமா மிகவல்ல மெய்பொருளுக்கும் அடியேன் விரிபொழில் சூழ்குன்றையார் விறல்மிண்டர்க்கு அடியேன் அல்லிமென் முல்லையந்த்ார் அமர்நீதிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே என்று பாடி அருளினர். இறைவர் அங்கனம் அடி எடுத்துத் தந்ததைக் குன்றைக் கோமகளுர், தொல்லமால் வரைபயந்த தூயாள்தன் திருப்பாகன் அல்லல்தீர்த் துலகுய்ய மறைஅளித்த திருவாக்கால் "தில்லைவாழ்அந்தணர்தம் அடியார்க்கும்.அடியேன் என்று எல்லையில்வண் புகழாரை எடுத்திசைப்பா மொழி, என்ருன் என்று எடுத்து மொழிந்துள்ளார். 'சுந்தரர் பாடியுள்ள திருத்தொண்டத் தொகையின் முதல் திருப்பாட்டினை நன்கு உற்று நோக்குதல் வேண்டும். இப்பாடல் எட்டடிகளில் காட்சி அளித்தாலும், அஃது உண் மையில் நான்கடிகளால் ஆன பாட்டே ஆகும். எட்டுச்சீர்கள் கொண்ட ஒவ்வோர் அடியினேயும் அப்படியே வரிசைப்படுத்தி அச்சிட வேண்டினல், ஏடு இடத்தராது. ஆகவே, ஒவ்வோர் அடியும் இரு அடிகளைப்போல அச்சிடப்பட்டுள்ளதை நன்கு மனத்தில் கொள்ளுதல் வேண்டும். இங்ங்னம் உணர்ந்த போது, இப்பாட்டின் முதல் நான்கு வரிகள், அதாவது, 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பது பெறப் படுகிறது. அவ்வடி திருவாரூர்த் தியாகர் எடுத்துத் தந்த அடி. ஏனைய அடிகள் வன்ருெண்டர் வாக்கு என்பது புல கிைறது. முழுப்பாட்டை நோக்கத் தியாகர் வாக்கு, அரைக்