பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 51 ஈண்டுச் சேக்கிழார் பெருமானர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர்க்கும் ஒப்பாவர் என்பது கூறப்பட்டுள்ளது. “சிவபாத இருதயர் உளத்து உவகை நண்ண ஒண்பொருள்' என்பதற்குச் சிவபாத இரு தயர் மனத்தில் மகிழ்வு பொருந்தப் பிறந்த சிறந்த பிள்ளை' என்னும் பொருளுடன், 'சிவஞர் திருவடிகளே உளத்தில் கொண்ட சிவநேசர்களின் மனத்தில் மகிழ்ச்சிபெரும்படி செய்யும் ஒள்ளிய பெருஞ் செல்வம் ஆவார் சேக்கிழார்,' என்றும் பொருள் தருதலையும், 'நாடும் உழவாரம்வலம் இயைதலால்' என்பதற்கு 'எவரும் விரும்பும், உழவாரப் படையின் தொண்டில் பொருந்தியிருக்கும் அப்பர் போன்று, எவரும் நாடும் உழவுத் தொழிலின்மேன்மை பொருந்தி யிருக்கும், சேக்கிழார் என்றும் பொருள் தருதலையும், நாவலர் பிரான் என்பதற்குத் திருநாவலூரில் பிறந்த தலைவராம் சுந்தரர் என்னும் பொருளுடன், நாவீறு படைத்த புலவர் பெருமாளுராம் சேக்கிழார் என்னும் பொருள் கொள்ளு தற்கும் இடம் இருத்தலின், 'முதல் மூவரும் புகலும் குன்றை யூர் வேந்து' எனப்பட்டார். மேலும், சேக்கிழார் மூவர் முதலிகளும் பாடிய தேவாரத்தின் உண்மைப் பொருளை விரித் திருக்கின்றமையாலும், மூவருக்கும் ஒப்பாவர் என்பதனுலும் 'மூவரும் புகலும் வேதத்தமிழ்க் கண்ணுள்ள மெய்ம்மையை விரித்துத் த்ெரித்தருள் குன்றையூர் வேந்து' எனப் பட்டார். திருஞானசம்பந்தரின் தோற்றம், நம்மைேர்க்குத் திரு வருள் பெறுதற்குப் பெருந் துணையாதலில், 'நம்மை அருள் *ஒண் பொருள்' எனப்பட்டது. திருநாவுக்கரசர் எப் போதும் உழவாரப்படை கொண்டு இலங்குதலை ஆசிரியர் சேக்கிழார், மார்பாரப் பொழிகண்ணிர் மழைவாரும் திருவடிவும் மதுரவாக்கில் சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொன்தாளே